பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதினைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 28 o' எ - டு. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி பவர். என்ற குறளில் (குறள் - 487) உள் வேர்ப்பர்’ என்றதனான் மனகிகழ்ச்சி ஆகியவாறு காண்க. (30) ஐயம் என்பது, ஒரு பொருள்மேல் இருபொருள் தன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம். ஒரு பொருளைக் கண்ட வழி இதுவெனத் துணியாத நிலைமை (இனம்). எ டு. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலும்னன் நெஞ்சு. என்ற குறளில் (குறள் - 1081) ஐயம் மனத்தின்கண்கிகழ்த் து கண்ட பொருளை இதுவெனத் துணியாத நிலைமை காண்க, (31) மிகை என்பது, கல்லாமையும் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதி. மிகை-ஒருவனை நன்கு மதியாமை” (இளம்). எ - டு. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். என்ற குறளில் (குறள் . 158) மிகுதி என்பது, கன்கு மதியாமை பாகும், (33) நடுக்கம் என்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பில் புலப்படுமாற்றான் உள்ளம் கடுங்குதல் : புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று கடுங்குதல் அன்பால் கடுங்குதலாம். அச்சம் என்னும் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித் தோன்றிய கடுக்கம் அச்சத்தால் தோன்றிய நடுக்கலாம் என்பது. நடுக்கம் - யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரும் மனநிகழ்ச்சி". (இளம்.) எ - டு, கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் கடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே. என்ற கலியடிகளில் (கலி. 13) இம்மெய்ப்பாடு வந்துள்ளமை காண்க. இம்முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத் திற்கும் பொதுவாக நிகழும் என்றே கொள்வர் இளம்பூரணரும் பேராசிரியரும். -