பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 2. மக்கள் இவர் பிறந்த அதங்கோடு என்ற ஊர்ப்பெயரைச் சார்த்தி அதங்கோட்டாசான்’ என வழங்கலாயினர். இப்பெயரே நாளடை வில் பெருவழக்காயிற்று : இயற்பெயர் இஃதென அறியக்கூடாத நிலையும் ஏற்பட்டது. இத்தகைய பெரியோரைப் பனம்பாரனார், அறங்கரை காவின் கான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்று குறிப்பிடுவர். ஒரு நூலின் அரங்கேற்றம் நடைபெறுங்கால் அவையில் குழுயி புள்ள அறிஞர் பெருமக்கள் நூற்பொருளைக் குறித்து பல்வேறு வினாக்களை எழுப்புவர். நூலாசிரியன் அவ் வினாக்கட்கெல்லாம் பொருந்துமாறு விடை பகர்ந்து தின் துணியினை நிலை நிறுத்தும் கடமையுடையவனாவான். அங்ங்னமே, தொல்காப்பியரும் அவையில் அறிஞர் உள்ளத்தில் தோன்றிய ஐயங்கட்கெல்லாம் அவையினர் ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு அமைதி கூறித் தம் நூலை அரங்கேற்றினார். நூல் அரங்கேற்றப்பெற்ற பொழுது அவையினர் விடுத்த வினாக்கட் கெல்லாம் குற்றமற விடையிறுத்ததைக கண்ட அவைப்புலவர்கள் தொல்காப்பியரின் தமிழ்ப்புலமையின் தெளிவினையறிந்து மகிழ்க் தனர். அன்றியும், அவருக்கு வாய்த்த ஐந்திர இலக்கணப் பயிற்சி பின் நிறைவினையும் அறிவதற்கு இஃது ஒரு வாய்ப்பினையும் இந்தது. இதனை அறிந்த அவையினர் இவரை ஐந்திரம் கிறைந்த தொல்காப்பியன்' எனப் பாராட்டினர். ஐக்திரம் என்பது இந்திர னால் செய்யப்பெற்ற ஒரு வடமொழி வியாகரணம் : இலக்கணம். தொல்காப்பியனார் காலத்தில் அது பெரு வழக்கிலிருந்தது. இந்த அரங்கேற்றச் செய்தியைப் பனம்பாரனாரின் சிறப்புப்பாயிரத்தின் பிற்பகுதி குறிப்பிடுகின்றது. நிலக்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை காவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்(கு) அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குர்ே வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை போனே. (கிலம் தரு-பிற நாட்டைக் கைக்கொள்ளும் : அறம் கரை-நீதியைக் கூறும்; முற்றிய-முற்றும் பயின்ற அரில் தப-குற்றம் நீங்க தெரிந்து-காட்டி மல்குர்ே வரைப்புரோல் சூழப்பெற்ற காடு படிமை-தவவேடம்.1