பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கழன்று விழாதபடி இறுகச் செறிப்பது போலத் தடவுதல். ஊழ் - முறை இயல்பு, (4) உடை பெயர்த்துடுத்தல் என்பது, தனது உடம்பின் நெகிழ்ச்சியை உணர்ந்த தலைமகள் தான் உடுத்த உடையினைக் குலைத்துக் குலைத்துப் பல முறையும் இறுக உடுத்துக்கொள்ளு தல். “பெயர்த்து என்பது மீட்டும் என்னும் பொருளைக் குறிக்கும் அழித்து எனக் கொள்ளுதல் அமைவுடையதன்று. முன் கட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் இதுக்குதல் என்பதே பொருந்திய பொருளாகும் : அவ்வாறன்றி, ஆடையைத் தலைவன் எதிரில் தலைவி தானே அழித்துடுத்தல் பெண்ணிச்மையன்றாத லின் இது பொருளன்மை தேற்றம்” என்பது டாக்டர் பாரதியாச் அவர்களின் குறிப்பு. இவை கான்கும் முறையே கிகழும். தலைவியின் உள்ளச் சிதைவறிக் து தலைவன் அவளை மெய்யுற ஆணுகிய நிலையில் கிகழ்வன இவையாதலின், இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப் பெற்றன. எ - டு. விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன் கண்ணின் நோக்கிய தல்லது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ, அவனே வரைப்பாற் கடவுளு மல்லன், அதற்கே ஒதி முந்துறக் காதொன்று ஞெகிழ கிழலவின் மணிப்பூண் கெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிது கிமிர்ந்தனவே, யேறி குவையதன் முதலே, யாதோ தோழி அது கூறுமா றெமக்கே. என்ற இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில் இந்நூற்பா கட்டும் மேய்ப்பாடு கான்கும் ஒருங்கே நிகழ்ந்தமை தலைவியே கூறுதல் காண்க. இப்பாடல் தோழிக்குத் தலைவி அறத்தொடு கின்றது. - - மூன்றாம் மெய்ப்பாடு : இஃது ஊன்றிவளர் காதலின் மூன்றாங் கூறுபாடு உணர்த்துகின்றது. இதனை ஆசிரியர், அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி புறுத்தல் இருகையும் எடுத்தலொடு சொல்லிய கான்கே மூன்றென மொழிப 4 என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். .4 மெய்ப். நூற். 15 (இளம்)