பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் - (களவு) 287° {!) அல்குல் தைவரல் என்பது, முற்கூறியவாறு உடைப் பெயர்த்துடுத்த தலைமகள் உடை பெரிதும் கெகிழ்க்த கீலையில் அவ்வற்றம் மறைத்தற்குத் தன் மறைக்த தானத்தைக் கையால் பொத்துதல். அல்குல்' என்பதற்கு இடக்கர்ப் பொருள் கூறுதல் பொருந்தாது என்று மறுப்பர் டாக்டர் பாரதியாச். அல்குல் என்பது இருப்புறுப்பு (ஆசனம்). தைவரல், தடவுதலாம். உடை பெயர்த்துடுத்திய’பின் குலையாது திருத்திய கலை மன்நிலை படிய இடைக்கீழ் அவ்வுடை தொடும் தடம் விரி இருப்புறுப்பைத் தடவுதல் இயல்பு, அவ்வியல்பு இங்கு 'அல்குல் தைவரல் எனக் குறிக்கப்பட்டது” என்பது டாக்டர் பாரதியாரின் உரை. அல்குல் என்பது, தொடைக்கு மேலும் இடைக்குக் கீழும் உள்ள பகுதி (buttocks). அதன் மேற்பகுதி சுருங்குதலின் - சிறுத்தலின் - அல்குல்' எனப்பட்டது, அல்குதல் - கருங்குதல். தொடைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள பகுதியின் பின்பக்கமே - முதுகிற்குக் கீழ் உள்ள பகுதி - அல்குல் எனப்படும். பெண்டிரின் அப்பின்பக்கமே ஆடவரின் கண்ணையும் கருத்தையும் கவர்வதாகும். அல்குலுக்குத் தேர்த்தட்டையும் பாம்பின் படத்தையும் உவமை கூறுவர் புலவர் பெருமக்கள். அவ்விரண்டும் ஒப்புமையாதலை ஒப்பிட்டு அறிக. {2} அணிந்தவை திருத்தல் என்பது, உடையினைச் சார இடையிலணிந்த கடிசூத்திரம் முதலியவற்றை கெகிழாது திருத்திப் போற்றிக்கொள்ளுதல். ஊழனி திருத்தியும் உடை திருத்தியும் கொண்டபின், விரும்பப் புனைந்த வேறு கலன் திருத் தலும் காதற்காட்சியில் புகுமுகம் புரியும் பெண்டிர்க்கு இயல்பு. அணிந்தவை - ஊழணியல்லாப் பிற கலன்கள். (3) இல்வலி புறுத்தல் என்பது, இல்லாத வன்மையை மிகுத்தல். அஃதாவது, தலைமகள் தன் வலியற்ற நிலையிலும் தான் புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதொரு வன் செப்கையைப் படைத்துக்கொண்டு கிற்றல். பெருகுங் காதலால் துரண்டப்பெறும் தலைவி செற்றார் போல் கோக்கு"வதும் 'கிறையழியுங் தலைவி தனக்கில் வலியுறுத்தும் கிற்பதும் பெண்ணியல்பாகும். - (4) இருகையும் எடுத்தல் என்பது, இங்ஙனம் தலைமகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் 5. கலி. இ5 இன் உரை (கச்.) - 6. கடி - காப்பு, காவல் : அஃதாவது, உடைக்குக் காப்பு. கடி சூத்திரம் . அதை ஞாண்.