பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தலைமகள் பூவும் சாக்தும் பூணும் துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே கோலஞ்செப்த சிலையிலும் அவள் தன் அன்பிற்கினிய தலைவனைக் கூடப்பெறாமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோத்தல். (2) புலம்பித் தோன்றல் என்பது, சுற்றத்தார் பலரும் சூழி அவர்கள் தடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணை பின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தின ளாதல். (3) கலங்கி மொழிதல் என்பது, தனிமையால் வருந்தும் தலைவியைப் பரிந்து சுற்றம் துணி முதல் வினவ, அவள் கையும் களவு:2ாகப் பிடிபட்ட கள்வசை போன்று தான் சொல்லுவன வற்றை மனத்தடுமாற்றம் தோன்றக் குழறி மொழிதல். 14) கையறவுரைத்தல் என்பது, தளிமை தாங்காத் தலைவி தனது மனக்கலக்கத்தை அடக்கிக்கொண்டு பேசும் கிலையிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல். எ - இ. இவளே. அணியினும் பூசினும் பிணியிழந் தசைஇப் பல்கிளை காப்பண் இல்கிளை போல மொழிவகை பறிவாள் பொழிகண் ணிர்துடைத் தியானே கையற வலம்வரும் கூறாய் பெரும! கிற் றேறு மாறே. என்று வரைவுகடாவுவதாக வந்துள்ள இலக்கணவிளக்க மேற்கோள் பழம்பாட்டில் இங்குக் கூறிய மேய்ப்பாட்டுணர்வுகள் கான்கும் ஒருங்கமையத் தோழி கூறினமை காண்க, கையறவுரைத்தல் தோன்றியதன் பின்னர் கிகழ்வன ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருக்திணைக்கும் மெய்ப்பாடாவனவன்றி கடுவனைக்தினை எனப்பட்ட கற்காமத்திற்கு ஏற்புடையன அல்ல என்பர். இந்த எல்லை மீறிய மெய்ப்பாடுகள் களவொழுக்கத்தினுள் வாரா என்று அறிவித்தற்கென்றே கையறவுரைத்தல் என்ற மெய்ப்பாடு ஈற்றில் வைக்கப்பெற்றது. மேலும், தலைமகன்பால் தோன்றும் குறிப்புச் சிலபற்றித் தலைமகள்பால் பல குறிப்புப் பிறக்குமாகலின் தலை மகளிடத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளே சிறந்தவை என்று ஈண்டு வரையறுத்துரைக்கப்பெற்றன.