பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் - (களவு) 235 கருதுவர் கொல் எனவும், பிரிக்தோர் மறந்து இனி வாரார் கொல் எனவும் தோன்றும் உள்ள நிகழ்ச்சி, எ - டு. பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றகங் காதலர் வருவர்கொல் : வயங்கிழாஅய் ! வலியப்பல்யான் கேளினி' எனக் கலியடிகளில் (கலி. 11) இக்குறிப்பு வருதலை உணர்க. (5) பசியட கிற்றல் என்பது, பசி வருத்தவும் அதற்குத் தளராது ஊண் உண்ணாமை, எ - டு, அன்னாய் வாழிவேண் டன்னை கின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு கணிபசக் தனள் என வினவுதி' (பழங்கண் - துன்பம்} என்ற அகப்பாட்டடிகளில் (அகம்-48; இம்மெய்ப்பாடு தோன்றுதல் அறிக. (6) பசலை பாய்தல் என்பது, கூட்டம் பெறாது ஆற்றாத் தலைமகள் காதல் நோயால் தன் மாமைக்கவின் இழந்தேப்தும் கிற வேறுபாடு. எ டு. பசந்தாள் இவளென்ப தல்லால் இவனைத் துறந்தார். அவசென்பார் இல். என்ற குறளில் (குறள் - 1188) பசலை பாய்ந்த குறிப்பு வந்தமை காண்க. குறுக் 27 ஐயும் காண்க. (1) உண்டிவிற்குறைதல் என்பது, பசியட நிற்றலே யன்றிச் சிறிது உண்டியூட்டிய வழிப் பண்டு போலாது கழியவும் சிறிதுண்டல். எ - டு. தீம்பால் ஊட்டினும் வேம்பினும் கைக்கும் வாரா யெனினும் ஆர்வமே டு நோக்கும் கின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅள் என்னிதற் படலே. என்ற இலக்கணவிளக்க மேற்கோன் பழம்பாடலில் இவ்வியல்பு விளக்கப்பெறுதல் அறிக. (8) உடம்பு கனிசுருங்கல் என்பது, உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் கலிய உடல் நாளும் மெலிதல்.