பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தொல்காப்பியத்தின் பெருமை : தொல்காப்பிய அரங்கேற்றம் முடிவுற்றதும் தமிழ்நாடு முழுவதும் தொல்காப்பியத்தின் பெருமை பரவியது. தமிழறிஞர்கள் இந்நூலை விரும்பிக் கற்றனர் , தமிழ் உள்ளங்கள் இதன்பால் ஈர்க்கப்பெற்றன. வரையறையுடன் அமைந்த இந்நூலின் செல்வாக்கும் பெருகியது. இடைச்சங்கப் புலவர்கள் இதனைத் தங்களுக்குரிய இலக்கணமாக ஏற்றுக் கொண்டனர். தொல்காப்பியமே தமிழ் மொழியின் சட்டமாகத் திகழ்ந்தது. கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையில் தமிழ் அறிங் தோர்க்குக் கடனே.” என்று பல்காப்பியனார் என்ற ஒரு பழம் புலவர் கூறுவர். தமிழ்: உலகில் இலக்கிய ஆட்சியில் தொல்காப்பியருடைய ஆணையைப் புலவர்கள் அன்புடன் போற்றி ஆதரித்தனர். இவர் செலுத்திய அறிவானைக்குப் பெரியோர்களும் பணிந்து ஒழுகினர். தொல் காபபியத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களெல்லாம் இதற்கு இணையாகா என்ற ஒபபற்ற பெருமையுடன் இந்நூல் இன்று. கம்மிடையே உலவி வருகின்றது. பிற்காலத்தில் வேற்று நாட்டவர் படையெடுப்புக் காரணமாகத் தமிழகத்தில் நேரிட்ட குழப்பங்களாலும், தமிழ் காட்டில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வருததிய வற்கடத்தின் கொடுமை யாலும் மக்கள் தமிழ் வளரச்சியில் சோர்வுற்றனர், இங்கிலையில் தொல்காப்பியத்தின் பயிற்சியும் நாளடைவில் குன்றியது. அயலாரது கூட்டுறவினால் நூலும் உருத்திரியும் நிலையை அடைந்தது. தமிழ் மக்களது தென்மை காகரிகத்திற்கு முரணான கருத்துகள் சிலவும் நூலுள் இடை இடையே ஏற்றியுரைக்கம் பெறுவனவாயின. இங்ங்னம் சிறிது உருக்குலைந்த தொல்காப் பியமே இன்று நம்மிடம் வழங்கி வருகின்றது. உரையாசிரியர்கள் : எல்லாச் சிறப்பும் வாய்ந்த இத் தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகள்வரை உரை எழுதப் பெறவில்லை. வழிவழியாகப் பாடம் சொல்லும் ஆசிரியர்கள் தத்தம் மாணாக்கரகட்குத் தாம்தாம் உணர்ந்த அளவுக்கு. உரையமைத்துப் பாடம் சொல்லி வந்தனர். நாளாக காளாக அவர்கள் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் தத்தம் கருத்திற். கேற்பத் திருத்தி உரை கூறி வந்தனர். எனவே, நாட்டில் பல்வேறு. 5. மரபியல்-நூற்பா 95 (பேராசிரியரின் உரை மேற்கோள்).