பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகததிணைக்குரிய மெய்ப்பாடுகள்-(களவு) 297 (13) ஐயம் செய்தல் என்பது, தலைவர் நம்மைத் துறப்பாரோ என்று ஐயுறுதல். எ - டு. ஒண்ணுதல் வுேவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொலோ அறியேன் என்னும்’ என்ற கலியடிகளில் (கலி, 4) ஐயுறுதல் காதற்கு இயல்பாதலை அறிக. (14) அவன்தமர் உவத்தல் என்பது, தலைவனுக்கு உறவாயி னாரைக் கண்டு மகிழ்தல். எ டு. செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா எம்மொடு சேர்ந்துசென் lவாயாய் செம்மால் கலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாங் தீர்க்குவேம் மன். என்ற கலிப்பாட்டடிகளில் (கலி.83) இ ம் .ெ ம ப் ப் பாடு வக் துள்ளமை அறிக. - (15) அறனழிந்துரைத்தல் என்பது, அறனழிய வெறுப்பது போல் வெறுத்துக் கூறல். எ டு. விளியுமென் இன்னுயிர், வேறல்லம் என்பார் அளியின்மை யாற்ற கினைந்து. என்ற குறளில் (குறள். 1209) இம்மெய்ப்பாட்டினைக் காண்க. (18) ஆங்கு நெஞ்சழிதல் என்பது, சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல். எ - டு. பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு. என்ற குறள் (குறள் - 1295) இம்மெய்ப்பாடு குறிப்பது. (17) எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் என்பது, யாதாயினும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத் தலைமகனோடு ஒப்புமை கொள்ளுதல். எ - டு. இக்தி லேமொத் திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்