பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள்-(களவு) 2.99 கிமித்தமான பாவங்களாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறுவர் பன்மொழிப்புலவர் உயர்திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள். அவர் மெய்ப்பாட்டியலைப்பற்றிக் கூறியுள்ள கருத்து நமக்குப் பெரும் பயன் விளைக்கும் : அஃது இத்துறையில் ஆக்கவேலை செய்வார்க்குத் துண்டுகோலாகவும் இருக்கும். “ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாடுகளைக் கூறு மிடத்து ஒவ்வொரு மெய்ப்பாடும் நங்கான்கு பொருளிற் பிறக்கு மென்றும், அவை இன்னவை இன்னவை என்று கூறினாராயினும் அவர் மெப்ப்பாட்டின் (ரஸ்த்தின்) இயல்பினை விரித்துக் கூறினா சல்லச் பின்னும், உடைமை முதலாக முப்பத்திரண்டு மெய்ப்பாடு களும் உள்ளன எனக் கூறினவர், அவ்வெட்டனோடு இவற்றிற் குள்ள வேறுபாடும் விளங்க உரைத்திலர். இவற்றால், மெய்ப் பாட்டியலை ஆசிரியர் சுருக்கமாகவே கூறியுள்ளார் என்பது புலனாகும். வடமொழியில் இவற்றை விரித்துக் கூறும் நூல்கள் பல. அவற்றைப் பின்பற்றிக் கன்னடம் முதலிய திராவிட மொழி களிலும் சிற்சில நூல்கள் தோன்றியுள்ளன. தமிழிலோ, தொல் காப்பியத்தோடே நின்றது. ஆதலின், மெய்ப்பாட்டியலை கன்கு அறிந்துகொள்ளுதல் அரிதாகும்.' இனி, கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை அடுத்துக் காண்போம். 16. வேங்கடராஜுலு ரெட்டியார். வே. பரணர்-பக் 57