பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் - கற்பு) . 303 கன்றும் உண்ணாது (குறுங். 27) என்பதுவும் அது. (8) கட்டுரைவின்மை என்பது, உரை மறுத்திருத்தல் : கூற்று நிகழ்த்துதலின்றி உள்ளக் கருத்தினையும் மறைத் தமர்ந்திருத்தல். இதனால் தோழிக்கண்ணாயினும் தலைமகன் கண்ணாயினும் உரை முறை நிகழ்வதல்லது தலைமகள் உரை யாள் என்பது அறியத்தக்கது. எ - டு. யான்றன் அறிவன் தானறி பலளே யாங்கா குவன்கொல் தானே பெருமுது செல்வர் ஒரும். கைளே. என்ற குறுக்தொகையில் (குறுக். 33) தலைமகள் கட்டுரையா திருத்தலின் தலைமகன் தமரினெய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவு கடாவுதலாயினமை காண்க. கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் மொங்கொள் சிங்தையின் மூங்கையு மாயினேன். என்ற சிந்தாமணிச செப்புளில் (சிந்தா. 997) குணமாலைக் கூற்றில் கழிகாதலால் உரையறுதல் காண்க. வரைந்தபின் நிகழும் மெய்ப்பாடுகள் : இனி, வரைந்து உடன் வாழும் கற்புக்காதலுக்குரிய மெய்ப்பாடுகளைக் காண்போம். அவற்றை, தெய்வம் அஞ்சல் புரையறக் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மைப் பொழுதுமறுப் பாக்கம் அருண்மிக உடைமை அன்புதொக கிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே..? என்ற நூற்பாவால் குறிப்பிடுவர் ஆசிரியர், அவற்றுள், - (1) தெய்வம் அஞ்சல் என்பது, குள் பொய்த்தல். பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுதல். தெய்வம் தொழாது, கணவற்றொழுவதே கல்லில்லாட்டியர் தொல்லறமாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக் கூறப்பட்டது. z 2. மெய்ப் - நூற். 24 (இளம்.)