பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினைக்குரிய மெய்ப்பாடுகள்-(கற்பு) 3.07. என்ற கற்றிணையில் (கற். 149) அலர்மிகாமை கூறும் கூற்றில் கற்புக்கடம் பூண்டு கூறுதல் காண்க. இவை பத்தும் கற்பிற்குச் சிறந்த மெய்ப்பாடுகளாம். கரங்தொழுகலால் காமிஞ்சாலாத களவினும், வசைக்து உல கறிய உடன் வாழ்ந்து ஏமஞ்சான்ற மக்களோடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால் காமஞ்சான் , கற்புச் சிறக்தது. அச்சிறந்த வாழ்வு முன் கழிந்த களவின் பயனா மெனக் கற்பியல் இறுதியில் தெளிக்கப்பட்டிருப்பதால், அன்புத்தினையிற் சிறந்தது கற்புக்காதல். அதற்குச் சிறக் தன. இவண் கூறப்பட்ட மெய்ப்பாடு பத்தும். இக்த் அமைவு தோன்றவே "சிறந்த பத்தும் செப்பிய பொருளே’ எனக் கூறப் பட்டது. இதன் பிறகு காம நிகழ்ச்சியின் கண் ஒத்த அன்பினராய்க் கூறுவதற்குரிய தலைவனும தலைவியும் ஆகிய இவ்விருவர்பாலும் அமைய வேண்டிய பத்துக் கூறுகளைக் கூறுவர் ஆசிரியர். அவை: பிறப்பு, குடிமை, ஆண்மை, யாண்டு, உரு, அன்பு, சிறை, அருள், உணர்வு, திரு என்பவையாகும். இப்பத்து ஒப்புவகைக் குணங்களும் தலைவன் தலைவி ஆகிய இருவர்பாலும் அமைக்தால்தான் தலையாய காதல் நிலைபெறும் என்பதை உணர்த்த அவை ஈண்டுக் கூறப்பெற்றன. முன் களவியலில், ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தானையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்ற நூற்பாவில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற்கு இன்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டப்பட்டது. இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப் பட்டது. இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையால் தெளியப்படும். இவை ஒவ்வொன்றனையும்பற்றி முன்னரே விளக்கியுள்ளோம்.: காதலுக்காகாத குற்றங்கள் இக்கட்டுரையிலும் இதற்கு முக்திய கட்டுரையிலும் கூறிய மெய்ப்பாடுகள் தோன்றுதற்குரிய காதலுக்காகாத குற்றங்களைத் தொகுத்துக் கூறுவர் ஆசிரியர். இவை, 3. களவியல்-து ற்-2. (இளம்.) 4. இந்நூல்-பக்கம் (190, 191)