பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள்-(கற்பு) J C & இன்றியமையாதவை. அதனால் தலைவி தன் தாழ்வு மறுத்தல் இல்லறக் காதலுக்கு இழுக்கென விலக்கப்பட்டது. தலைவிக்கு உயர்குடியுவகை விலக்கியதோடமையாது தன் பணிவு மறவாது தலைவனுயர்வுள்ளலும் இன்றியமையாதென வற்புறுத்தும் குறிப் பால் குடிமைபின்புறல் கூடாதென்பதனோடு ஏழைமை மறப்பும் விதந்து விலக்கப்பட்டமை அறிக. ஒப்புமை என்பது, ஆண் பாலாயினும் பெண்பாலாயினும் தான் காதலிக்கப்பட்டாசைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு கிகழும் உள்ள கிகழ்ச்சி. அக்கினைவும் கற்பறம் அழிக்கும் இழுக்கமாதலின் கடியப்பட்டது. முன்னர் எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் வேண்டப்பட்ட தெனின், அது மலர் மதி போன்ற பொருள்களை அவற்றிற்கேற்கும் தலைமக்கள் உறுப்போடொப்புமை கோடலே குறித்தலின், அது குற்றமற்ற காதற்குறிப்பு எனக் கொள்ளப்பட்டது. இங்குப் பிறரோடு தலைமக்களின் ஒப்பு கிணைப்பது உண்மைக் காதலுக் கேலாப் பிழையாதலின் அது கடியப்பட்டது. மேற்கூறியவற்றுள் குடிமை இன்புறல் ஒரு தொடராகவும் *ஏழைமை மறப்பை”, “ஏழைமை”, மறப்பு’ என இரண்டாக்கியும் குற்றம் பதினொன்று எனக்கொள்வர் இளம்பூரணர். பேராசிரியரோ, "குடிமை இன்புறல்’ என்ற தொடரைக் குடிமை", இன்புறல்’ என வெவ்வேறு பிரித்துப் பன்னிரு குற்றம் எண்ணிக் காட்டுவர். குடிமை காதலர்க்கு வேண்டப்பெறும் ஒப்பு வகையுள் ஒன்றெனவும் (மெய்ப். நூற். 25). இன்புறல் உண்மைக் காதற்குறிப்பு என்று எண்ணப் படும் மெய்ப்பாடுகளுள் ஒன்றெனவும், (மெய்ப். நூற். 12) முன்னர்க் குறிப்பதனால் அவற்றைக் காதலுக்கு ஒவ்வாத குற்றங்களெனத் தொல்காப்பியர் இவண் கடித்தாரெனக் கோடல் முன்னொடு பின் முரணாவதால் அவ்வாறு கொள்ளுதல் எனைத்தானும் கூடாது. ஆதலின், குடிமை இன்புறலை ஒரே தொடராகக்கொண்டு பிறப் பின் பெருமிதம் கலைவிக்கேலாத் தவறெனக் கூறுதலே கருத்தாதல் தேற்றம், அங்ங்னமே மறப்பை ஏழைமையின் வேறாகப் பிரித்தலும் பொருந்தாது. மேலே, பொச்சாப்பு மெய்க்காதற் குறிகளுள் ஒன்றெனக் கூறப்படுதலின், அதனையே மறப்பெனச் சொல் மாற்றிக் காதலுக்கேலாத குற்றமெனக் கருதுவதற்கில்லை. அன்றியும், ஏழைமையுணர்வு கன்றாவதன்றிக் காதல் வாழ்வில் கடிவரையின்று. ஆதலின், அவ்விரண்டனையும் ஒருங்கெண்ணி, ஏழைமை மறப்பைக் குற்றமாகக் கொள்வதே ஒருதலை. இன்னும், மேலிரு நூற்பாக்களும் பத்தே கூறுதலை கோக்க, ஈண்டும் அவ்வாறே பத்தெனக் கோடலே ஏற்புடைத்தாகும். இனி, இன்மை என்மனார்’ என்பதைக் காதலர்க்கு இன்மை வேண்டும்” என