பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. உவமையணி தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் அகப் பொருள் புறப்பொருள்களைக் கூறும் பாக்களை அணி செய்வதற் குக் கவிஞர்கள் உவமம் என்னும் அணியையே துணையாகக் கொண்டிருக்தனர். உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக அப்பொருளினுடைய வண்ணம், வடிவு, தொழில் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும் படி செய்வதாகிய பொருட்புலப்பாட்டு நெறியாகும். காட்டில் திரியும் "ஆமா என்ற விலங்கினைக் கண்டறியாத ஒருவன் அதனை அறிக் துகொள்ள விரும்பினால், ஆவினைப் போன்றது ஆமா என்று அவனுக்குத் தெரிந்த பசு விண்ை ஒப்புமையாகக் காட்டி உணர்த்துதல் மரபு. அந்த ஒப்புமையைக் கேட்ட பிறகு, அவன் காட்டிற்குச் சென்று, ஆமாவை நேரில் கண்டு, ஆமா இதுவே: என்று உணர்ந்துகொள்வான். இவ்வாறு, பிறிதொன்றனை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக் கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமம் எனப்படும். உவமம் எனினும் உவமை எனினும் ஒக்கும். வடமொழியில் உவமை அளவையாகவும் அணியாகவும் வகுக் கப்பேறுகின்றது. உவமை அளவையாகும் போது அது பொருளின் இயல்பை மிக அணித்தாக எடுத்துக் கூறுவது (ஸாமீப்ய மானம் உபமானம்) என்பர். தொல்காப்பியர் உவமையை அணி என்னும் பெயரால் குறிக்கவில்லை. அகத்தினையியலில் அவர், உள்ளுறை யுவமம் ஏனை உவமமெனத் தள்ள தாகுக் திணையுணர் வகையே." என்று கூதிப் பின்னும் சில நூற்பாக்களை அமைத்தார். இந்த இரண்டனைத்தான் உவமயியலில் விரித்துரைக்கின்றார். உலக வழிக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனைய உவமத் தின் இயல்பினை முதலிலும், செய்யுளுக்குரிய-சிறப்பாக அகப் பொருளுக்கே உரிய-உள்ளுறை யுவமத்தின் இலக்கணத்தினை இரண்டாவதாகவும் வைத்து விளக்குகின்றார். உள்ளுறை புவமத் தினை முன்னர் விளக்கினோம். ஏனைய உவமத்தினை ஈண்டு விளக்குவோம். - 1. அகத்தினை - நூற். 49 (இளம்) 2. இக்நூல் பக்கம் (191.197)