பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையணி 3 #3 கப்படும் பொருளும் வண்கையால் பெறும் பொருளும் ஒக்கும் என்பது பட வந்தமையின் பயன் உவமம் எனப்படும். துடியிடை” என்பது, அல்குலும் (இடுப்பின் கீழ்ப்பகுதி) ஆகமும் (இடுப்பின் மேல்பகுதி) அகன்று காட்ட அஃகித் (சுருங்கி, தோன்றும் மருங்கு லால் (இடுப்பு) துடி அதனோடு ஒத்தது. இது வடிவொத்தமையின் மெய்யுவமம் எனப்படும். பொன்மேனி என்பது, பொன்னின் கண்ணும் மேனியின் கண்ணும் உள்ள கிறம் ஒத்தலால் உருவுவமம் ஆயிற்று. வினை, பயன், மெய், உரு என்னும் கான்கனுள் அளவும் சுவையும் தன்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்கு மாதலின் உவமப்பகுதி இக்கான்கே என்று வரையறுத்தார் ஆசிரியர் என்பது ஈண்டு அறியத் தக்கது. ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை கூறுங்கால், மேற் கூறிய கான்கு விகற்பங்களில் ஒன்றும் பலவும் ஒருவமையில் விரவியும் வரும் என்பர் ஆசிரியர். விரவியும் வரூஉம் மரபின என்ப.: என்பது தொல்காப்பிய நூற்பா. செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவான் வையெயிற்று' என்ற அகப்பாட்டடிகளில் (அகம் - கடவுள் வாழ்த்து) செவ்வான் அன்ன மேனி என்பதில், கிறம் ஒன்றே பற்றி உவமை வந்தது : 'அவ்வான்.வையெயிற்று" என்பதில் - அஃதாவது பிறையன்ன வையெயிறு என்பதில், - பிறைக்கும் எயிற்றுக்கும் வண்ணமும் வடிவமும் ஒத்து வந்தன. மேலும், கrயா மென்சினை தோய டிேப் பஃறுடுப் பெடுத்த வலங்குலைக் காங் தள் அணிமலர் கறுந்த துசதுக் தும்பி கையாடு வட்டில் தோன்றும் மையாடு சேன்னிய மலைகிழ வோனே.” என்ற அகப்பாட்டுப் பகுதியில் (அகம்-108), ஆடுதல் தொழில் பற்றியும், வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும், வண்டிற்கு வட்டுக் காய் உவமையாப் வங்துள்ளமை காண்க. உவமை அமைக்கும் முறை உவமை அமைக்கும் பொழுது உவமிக்கப்படும் பொருளாகிய உபமேயத்தைவிட அதன் இயல் 4. உவம.-நூற். 2 இளம்.)