பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பினைப் புலப்படுத்தற்பொருட்டு எடுத்துக் கூறப்படும் உவமை உயர்ந்த பொருளாக அமைய வேண்டும் என்பது, உயர்த்ததன் மேற்றே உள்ளுங் காலை." என்ற நூற்பாவால் அறியப்படும். இங்கு உயர்ச்சி என்றது, வினை பயன் மெய் உரு எனச் சொல்லப்பெற்ற பொதுத் தன்மை களால் உபமேயத்தினும்,உபமானம் உயர்வுடையதாதலை. இதனால் நாம் அறிய வேண்டுவன : உயர்ந்த பொருளுக்கு இழித்த திொன்றனை உவமையாகக் கூறுதல் கூடாது. உவமானத்துடன் உபமேயம் பொருள் முழுவதும ஒத்திருத்தல் வேண்டுமென்ற வசை பறை இல்லை. அதன் ஒரு பகுதி மட்டிலும் ஒத்து அமைந்திருத்தல் சாலும், உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்பெறும் பொருளை உவமையாக எடுத்தாள நேருங்கால் அதன்கண் ஆமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக்கொண்டு உயர்த்த குறிப்புப்பட உவமம் செய்தல் வேண்டும். உவமையின் கிலைக்களம் : மேற்கூறியவாறு தோன்றும் உவமை சிறப்பு, கலன், காதல், வலி என்ற நான்கனுள் ஒன்றை கிலைக்களமாகக்கொண்டே தோன்றுதல் வேண்டும். சிறப்பே கலனே காதல் வலியோடு அங்காற் பண்பும் கிலைக்கும் என்ப.8 என்ற நூற்பாவினால் இதனை அறியலாம். இவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச்செயற்கை வகையாற் பெறுவது. கலன் என்பது, ஒரு பொருட்கண் இயல்பாய்த் தோன்றிய கன்மை, காதல் என்பது, கலனும் வலியும் இல்லாத கிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளனவாகக்கொண்டு கூறுவது. வலி என்பது, ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். சில எடுத்துக்காட்டுகளால் இவற்றினை விளக்குவோம். - முரசு முழங்குதானை மூவரும் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழா அல் கோடியர் தலைவ கொண்ட தறிக. என்ற பொருநராற்றுப்படையடிகளில் (அடி 54-57) பெருமை 5. உவம - துரற். 3 (இளம்.) 6. உவம. - நூற். 4 (இளம்.)