பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையணி 3 : G போல இனிய மொழி என விரித்தும் : தேன் போலும் மொழி' என உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்கும்; தே மொழி: என எல்லாம் தொக்கும் பல்வேறு வடிவங்களில் உவம உருபுகள் பயின்று வரும் என்பது அறியத்தக்கது. மேலும், இவ்வுருபுகள் வினை, பயன், மெப், உரு என்ற நான்கு பகுதிகளிலும் வழங்குமிடத்து, இன்னவின்ன உருபுகள் இன்னவின்ன உவமைகட்கே உரியன என்றும், உவமயியல் 12 முதல் 16 முடியவுள்ள ஐந்து துர ம்பாக்களில் வரை யறுத்து எடுத்தோதுவர் ஆசிரியர். இவ்வாறு ஒவ்வோர் உவமப் பகுதிக்கு உரிமைப்படுத்தும் உருபுகளை கியமித்தலின் பிற்காலத் துப் போல எல்லா உருபுகளும் எல்லா உவமைகட்கும் ஆசிரியர் காளில் வழங்கின அல்ல என்பதும் அங்ஙனம் வழங்காது உரிமைப் பட்டத்து ஒவ்வொரு காரணம் பற்றியே என்பதும் கன்கு அறியப் படும். இதனால்தான், “தத்தம் மரபில் தோன்றுமன் பொருளே’ என்து அவ்வுருபுகளின் மரபு வழுவா நிலையையும் ஆசிரியர் வற்புறுத்துவாராயினர். ஈண்டுப் பேராசிரியரும், மறுப்ப ஒப்ப என்பன முதலாயின. ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருமரபினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லது உம், மரபில் தோன்றும்’ என்றதனான், இவையெல்லாம் மரபு பற்றியே அறிதல் வேண்டும். எனவே, தலைச்சங்கத்தார் முதலாகினார் செய்யுள்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே. இவ்வாறு சூத்திரஞ் செய்தலான் என்பது' என்று எழுதுவர்." இங்ங்னம் மரபு பற்றி கரும் உருபுகளாகத் தொல்காப்பியர் கூறியவற்றுள் ‘நளிய, கந்த" என்ற இரண்டும் பண்டே வழக்கு வீழ்ந்தன என்பது, அவ்விரண்டும் இக்காலத்து அரிய போலும் அவை வந்தவழிக் கண்டு கொள்க’ என்று பேராசிரியர் குறித்தலால் அறியலாகும். இவ்வுவம உருபு வரை யறையிலக்கணத்தைத் தொல்காப்பியத்தின் பழமைய்ை உணர்த் தும் சான்றுகளுள் ஒன்றாகச் சிலர் கொள்வர்.' உவமைகளின் வகை மேற்சொல்லப்பெற்ற உலமை வினை, பயன், மெய், உரு என்னும் கான்கு வகையாகலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு என்பதை, T1, உவம் நூற். 17 (இளம்.) 12. .ை 17 (பேராசிரியர் உரை.) 13. ை- நூற். 16.இன் உரை. 14. வேங்கடசாஜுலு ரெட்டியார், வே.பாணர் பக்.(171.173)