பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள் -(1) 3.25 கேட்போர் களனே காலவகை எனாஅ பயனே மெய்ப்பா டெச்சவகை என அ முன்னம் பொருளே துறைவகை எனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறு தலையிட்ட அங்கா லைந்தும் அம்மை அழிகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனா அப் பொருந்தக் கூறிய எட்டொடுங் தொகைஇ கல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனசே." என்னும் நூற்பா மேற்கூறிய முப்பத்து கான்கனையும் தொகுக் துணர்த்துகின்றது. "தனை கூறப்படாததன் காரணம் : இந்த நூற்பாவில் தளை என்பது தனி உறுப்பாகக் குறிக்கப்பெறவில்லை. சீரொடு சீர் புணரச் சேர்த்தியற்றும் அடியில் கின்ற சீரின் ஈற்றசையுடன் வருஞ் சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் வர இருசீர்கள் இசைத் தொடர்ச்சியுறத் தம்முள் தளைத்து (கட்டப்பட்டு) நிற்றலே தளை என்பது. சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனி யுறுப்பாகக் கொள்ளாது சீராலாகிய அடியின் அமைப்பாகவே கொண்டு இலக்கணம் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண நூலா சிரியர்கள் தளை என்பதனைத் தனிபுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது, ஆசிரியர் தொல் காப்பியனார்க்கும் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்து சிற்றல் தளையென்னுக் தனியுறுப்பாமெனக் கொள ரின் இவ்விரு சீர் இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கூறுதல் பொருக்தாது. அன்றியும், தளை பல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்வார்க்கு அத்தளையால் அடிவகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்கல் குற்றமாய் முடியும். எனவே, சீரது தொழிலாகிய தளையென்பதனைத் தனி வேறு உறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது போசிரியர் போன்றவர்களின் துணிபாகும்.' இனி, செய்யுளுக்குரிய முப்பத்து நான்கு உறுப்புகளையும் பற்றிய செய்திளைச் சுருக்கமாகக் காண்போம். 3. செய்யு நூற்பா (இளம்.) 4. ஷை நூற். (பேராசிரியர் உரை)