பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொருள் உலகம் தொல்காப்பியப் பொருளதிகாரம் பண்டைத் தமிழர்களின் பழக்கவழக்கங்களையும் நூல் முறைகளையும் பிற சிறப்பு களையும் ஆராய்க்து அறிவதற்கு ஒரு சிறந்த கருவி நூலாக இலங்குகின்றது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் அம்மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் நாகரிகத்தைக் காட்டும் பொருள் இலக்கணம் இல்லை. அந்தப் பொருள் இலக்கணத்தைக் கொண்டிருப்பது தமிழ் மொழியின் தனிச்சிறப் பாகும். அந்தப் பொருளதிகாரம் கூறும் பொருள் யாது என்பதைக் காண்போம். பொருள் வகை : பொருள்' என்ற சொல் பல கருத்துகளைக் குறிக்கும். இவ்வுலகிலுள்ள பூக்களின் மணத்தையும் ஏனைய மணப்பொருள்களையும் மூக்கினால் முகர்கின்றோம். பலவித உண்டிகளையும் பான வகைகளையும் நாக்கினால் சுவைக்கின் றோம். ஏழிசைகளையும் இசைப் பயனையும் செவிகளினால் துகர் கின்றோம். நாடகக் காட்சிகளையும் படக்காட்சிகளையும் கண்களி னால் காண்கின்றோம்; உருவமுள்ள பொருள்கள் யாவும் கம் கண்ணில் படுகின்றன. எத்தனையோ பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவற்றின் வன்மை மென்மைகளையும் பிற குணங்களை யும் அறிகின்றோம். சுருங்கக் கூறினால் மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகட்கும் புலனாகக்கூடியவை யாவற்றையும் பொருள் என்று கூறலாம். இவற்றைப் பருப்பொருள்கள்’ என்று குறிப்பிடுவர் அறிஞர்கள். காட்சிப் பொருள்கள் என்றும் இவற்றைக் கூறலாம். ஐம்பொறிகட்கும் எட்டாத பொருள்களும் உள்ளன. அவற்றை மனத்தினால் மட்டும் உணரலாம். அன்பு, அறம், நட்பு, ஈகை, சினம், பொறாமை போன்ற குணங்களை ஐம்பொறிகளால் அறிய முடியாது. இவற்றை உருவில் பொருள்கள்’ என்று அறிஞர்கள் 1. Lötious&sirésir, Concrete things 2. p (567& GLIrQ5sirésir - Abstract ideas