பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெற்றுப் பிளவு படாது ஒரு சொல் தன்மை எய்தி வரின், அவை: முறையே கேர்பு, கிரைபு என்னும் இருவகை அசைகளாகும். இருவகை உகரமோ டியைக்தவை வரினே 5ேர்பு கிரைபும் ஆகும் என்ப குறிலினை உகரம் அல்வழி பளன." என்ற நூற்பா இதனை உணர்த்தும், தனிக் குற்றெழுத்தாகிய நேரசையின் பின் இங்ங்னம் இருவகை யுகரமும் வந்து நேர் பசையாதல் இல்லை எனபதை அறிதல் வேண்டும். எ . டு, வண்டு, நாகு, காம்டி - இவற்றில் நேரசையின் பின் குற்றியலுகரம் வ க் து கேர்பசையாயிற்று. மின்னு, கானு, தீர்வு - என்றவற்றில் நேரசையின் பின் முற்றியலுகரம் வந்து நேர்பசையாயிற்று. வரகு, குரங்கு, மலாடு, பனாட்டு - இவற்றில் கிரை பசையின் பின் குற்றியலுகரம் வந்து கிரைபசை யாயிற்று. இரவு, புணர்பு, உலாவு - என்றவற்றில் கிரையசை யின் பின் முற்றியலுகரம் வந்து நீரைபசையாயிற்று. கேரின் பின் உகரம் வருதலின் நேர்பு, கீரையின் பின் உகரம் வருதலின் கிரைபு என இவையிரண்டும் காரணப் பெயராயின. மேற்கூறிய கால்வகை ஆசைகளுன் கேர், திரை என்னும் இரண்டும் இயலசை எனவும், நேர்பு, திரைபு என்னும் ஏனைய இரண்டும் உரியசை எனவும் பெயர் பெறும் என்று கூறுவர் ஆசிரியர். இயலசை முதலிரண் டேனவை உரியசை ே என்ற நூற்பா இதனை உணர்த்தும். கேர், கிரை என்பன செயற்கை வகையால் இயற்றிச் சேர்க்கப்படாது இயற்கை வகையால் கின்றாங்கு கிற்ப வரும் அசைகளாதலின் அவ்விரண்டும் இயலசை எனப்பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரிய வகையில் அமைந்தவை நேர்பும் கிரைபும் ஆதலின் அவ்விரண்டும் உரியசை எனப்பட்டன. எனவே. ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெயரெய்துவித்ததாயிற்று. 5. செய்யு, 4(இளம்.) 6. செய்யு-நூற். 6 (இளம்.)