பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள் - (1) 33 £ காற்சீரடியுள் கான்கெழுத்து முதல் ஆறெழுத்து ஈறாக வரும் மூன்றும் குறளடியாகும். ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தளவும் வரும் மூன்றடியும் சிந்தடி எனவும், பத்தெழுத்து முதல் பதினான் கெழுத்தளவும் வரும் ஐந்தடியும் நேரடியென்றும் (இதனை அளவடி என வழங்குவர் உரையாசிரியர்), பதினைந்து முதல் பதினேழெழுத் தளவும் அமையும் மூன்றடியும் கெடிலடி என்றும், பதினெட் டெழுத்து முதல் இருபது எழுத்தளவும் உயரும் மூன்றடியும் கழிநெடிலடி என்றும், அடிகளை எழுத்தளவினாற் பெயர் கூறி வழங்குவர் ஆசிரியர். இப்பெயரெல்லாங் காரணப்பெயர். மக்களுள் தீரக்குறியானைக் குறளனென்றும், அவனினெடி யானைச் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற்பட்டா .ெ ன ன் று ம் , அவனினெடியானைக் கெடியானென்றும், அவனினெடியானைக் கழிய கெடியானென்றுஞ் சொல்லுப. அவை போல் கொள்க இப்பெயர் என்பது” என்ற பேராசிரியரின் விளக்கமும் ஈண்டுக் காண்க." மேற்கூறப்பெற்ற ஐவகை அடியிலும் நேர் இறுதியாக வரும் சீரில் ஐந்தெழுத்தின் மேற்பட அமைதல் இல்லை : கிரையிறாகிய வஞ்சிச் சீராயின் ஆறெழுத்தளவினதாப் கிற்றலும் உண்டு. கசிர்கிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்கிரை வஞ்சிக் காறும் ஆகும்." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். மேலும், வஞ்சிச்சீர் முச் சீரடியாக வல்லது நாற்சீரடியாக வருதல் இலக்கணவன்றாதலின் இருபது எழுத்தின் மிக்க காற்சீரடிப்பா இல்லை என்பது இக் நூற். பாவால் உய்த்து உணரப்பெறும். இன்னும், ஈண்டோதப்பெற்ற அடிகள் பல தொடுக்கும்வழி ஒரடிக்கோரடி எழுத்தளவு மிகுந்தும் குறைந்தும் வருவனவாயினும், அவ்வடிகளில் அமைந்த சீரது நிலை, ஒசையால் மிகுதலும் குறைதலும் இல்லை என்பது ஆசிரியரின் கருத்து. எழுத்துகளை எண்ணுங்கால் ஒற்றும், ஆயதமும, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை : உயிரும் உயிர்மெய்யுமே கொள்ளப்பெறும். மேற்கூறிய ஐவகை அடிகளையும் விரித்துணர்த்துங் காலத்து, அவை அறுநூற்று இருபத்தைந்தாக விரியும். 13. செப்பு.-35, 36, 37, 38, 39. (இளம், 14. டிை 40 - இன் உரை (பேரா.) 15. ஷை நூற். 40 (இளம்.)