பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. தொடர்புற்று இயன்ற அடியினால் புலவன் தான் சொல்லக் கருதிய பொருளைச் சொற்கள் மிகாமலும் குறையாமலும் இறுதி யளவும் முற்றுப்பெற நிறுத்துதல் பாப்பு என்று சொல்லுவர் செப் :புள் செய்யவல்ல புலவர். எழுத்து முதலா சண்டிய அடியிற் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிட யாப்பறி புலவர்.2" என்பது ஆசிரியர் கூறும் விதி. இந்த யாப்பு பாட்டு, உரை நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுமொழி என ஏழு வகைப்படும், பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் காற்பே செல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்.24 என்ற நூற்பாவினால் இதனை அறியலாம். 7. மரபு : மரபு என்பது காலம், இடம் முதலியன பற்றி வழக்கு மாறுபடினும் அத்திரிபுக்கு ஏற்ப வழுப்படாமல் செய்வ. தோர் செய்கை. "குறித்த ஒரு பொருளை முடியச் சொற்றொடுக்குங் கால் இயற்சொல்லாகிய பெயர், வினை, இடை, உரியானும் : ஏனைத் திரிசொல், திசைச்சொல், வட சொல்லானும் எழுவகை வழுவும் படாமல் புணர்ப்பது என்றவாறாம்” என்பர் இளம் பூரணர்.25 பேராசிரியர் மரபு பற்றிய கருத்தினை மிக விரிவாக விளக்கியுள்ளார். ஈண்டுக் கூறும் மரபுகள் செய்யுட்கே உரிய. வென்பதும், மரபியலிற் கூறப்படுவன பொதுவென்பதும் வேறுபாடு உணரத்தக்கன. - 8. தூக்கு : துரக்கு என்பது, பாக்களை அடிதோறும் துணித்து நிறுத்தலாகிய ஒசைவிகற்பமாகும். அஃதாவது, அகவிக் (அழைத்துக்) கூறும் ஒசையது அகவல் : செப்பலோசையது வெண்பா , துள்ளலோசையது கலி : துரங்கலோசையது வஞ்சி எனத் துணிவது. மருட்பாவிற்குரிய ஓசை மேற்கூறிய துரங்கலும் 23. செப்பு - நூற் 74 (இளம்.) 24. ை- நூற். 75 (இளம்) 25. டிை - நூற். 76 இன் உரை (இளம்.) 26. .ை - நூற். 80 (பேரா. உரை.)