பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இடையிட்டுத் (முதற்சீரிலும் கான்காஞ்சீரிலும் மோனை முதலாயின வரத்) தொடுப்பது ஒரு உத் தொடையாகும். இக்கூறிய தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செங் தொடையாம். - மெய்பெறு மரபின் தொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் நூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழு நூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னேர்ரே,89 என்ற நூற்பாவால் முற்கூறப்பெற்ற தொடைகளின் விரிவகையை உணரலாம். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் தொடையின் பாகுபாடு 13699 என்றும், பேராசிரியர் 13708 என்றும் கனக் கிட்டுக் காட்டுவர். கச்சினார்க்கினியரோ 19291 என்று உரைப்பர். இவையனைத்தையும் ஈண்டு காட்டப்புகின் மிக விரியும். 19. நோக்கு நோக்காவது ஒரு செய்யுளைக் கேட்டோர் அதன்கண் மாத்திரை முதலாக அடி நிரம்புங் துணையும் பாடற் பகுதியை மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கி அதனகத்தமைந்த பொருள் நலங்களை உய்த்துணர்தற்குக் கருவியாகியதோர் உறுப்பாகும். நோக்குதல் - பயன் கோடல் என்பர் கச்சினார்க் கினியர். அஃதாவது, கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். மாத்திரை முதலா அடிநிலை காறும் கோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே.”* என்ற நூற்பா இதனை விளங்க உரைப்பதை அறிக. யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் காதிய பொருளை மடிக்குங் காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி கிற்கும் நிலை. அடிநிலைகாறும் என்றதனால் ஒரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒரு நோக்காக ஒடுதலும் பல கோக்காக ஒடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்று வகைப்படும்’ என்று இதனை விளக்குவர். இளம்பூரணர். இதனை முல்லை வைக் துனை தோன்ற” என்ற அகப்பாட்டினுள் (அகம்-8) பேராசிரியர் விளக்கிக் காட்டியுள்ளனர். ஈண்டு விரிப்பிற் பெருகு மாதலின் ஆண்டுக் கண்டு கோள்க. இனி, ஏனைய உறுப்புகளை அடுத்துக் காண்போம். 29. செய்யு. - நூற். 97 (இளம்.) - 30. தொல். - சொல் - நூற் 288 31. செய்யு. நூற். 100 (இளம்.) 32. செய்யு. - நூற். 104 (பேராசிரியர் உரை.)