பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் உலகம் 13 தலைவனைப் பெற்று இருப்பதால் அவை மனிதன் கடத்தும் மாக்கள் போன்றுள்ளன. அந்த மாக்களுள் சிறந்தவை பசுவாததால் அவை பசுக்கள்’ என்று கூறப்பெற்றன. உயிர்கள் கடவுளை அறியவொட்டாமல் அவற்றின் அறிவினை மலம், வினை, சடவுலக மூலமாகிய மாயை ஆகிய மூன்றும் மறைக்கின்றன. இவை நீரினை மயக்கும் பாசம் போன்றிருத்தலால், இவற்றைப் பாசம் என்று குறித்தனர். எனவே கடவுள், உயிர், உலகம் என்ற வாய்பாட்டிற்குப் பதிலாகப் பதி, பசு, பாசம் என்ற வாய்பாடு வழக்கில் அமைந்தது. வடநூற்கொள்கைப்படி பதி என்பது தலைவனையும், பசு என்பது மும்மலத்தால் கட்டுண்ட உயிர்களை யும், பாசம் என்பது உயிரினைப் பிணித்துள்ள மும்மலத்தையும் உணர்த்தும். இவற்றை இறை, உயிர், தளை என்று தமிழ்மொழி யால் உணர்த்தலாம். - - தொல்காப்பியரின் வரம்பு : மேற்கூறியவாறும் இன்னும் அறிவு நுட்பங்களுக்கெல்லாம் எட்டியவாறும் இவ்வுலகத்துப் பொருள்களை உறுப்பினாலும், தொழிலினாலும், பண்பினாலும் பாகுபடுத்தி நோக்கினால் அவை எல்லையற்று விரிந்து ஒருவித வரம்பினுள் அடங்காது போய்விடும். இவற்றை ஒரு வரையறைக் குள் அடக்கிப் பேசுவர் தொல்காப்பியர். அவர் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயின்றுவரும் பொருள்களை மூவகையாகப் பிரித்துப் பேசுவர். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறங் தனவே பாட லுள் பயின்றவை நாடுங் காலை.8 [து வலுங்காலை - சொல்லுங்காலத்து: முறை - முறையை (order of preference J என்பது அவர் கூறும் நூற்பா. முதற்பொருள் : முதற்பொருள் கிலம், காலம் என இருவகைப் படும். இதனை: முதல் எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பென மொழிட இயல்புணர்ந் தோரே. - 3 அகத்திணை நூற்பா 3. 4 ைநூற்பா 4.