பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஒத்தாழிசைக் கலி ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும். இவற்றுள் முதல் வகை இடைநிலைப்பாட்டு (தாழிசை), தரவு, போக்கு (சுரிதகம்) அடைநிலைக்கிளவி (தனிச்சொல்) என்னும் கான்குறுப்புடையதாகப் பயின்றுவரும். இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென கடைகவின் றொழுகும் ஒன்றென மொழி.?? என்ற நூற்பா இதனைப் புலப்படுத்தும். இங்குச் சிறப்புடைமை கருதித் தாழிசையை முற்கூறினாரேனும் தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என இம்முறையால் வருதலே ஒத்தாழிசைக் கலியாகும் என்பதை அறிக. தரவாவது, மற்றைய உறுப்பின் பொருள்களைத் தொகுத்துத் தக்து கலிப்பாவின் முதலுறுப்பாய் முன்னிற்பது. தரவு தருத லுடையது. பாட்டின் முகத்துத் தரப்படுவது. முகத்திற்படுத் தர வினை முகம் எனவும், இடைநிற்பனவற்றை இடைநிலை எனவும், இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரிகிலை எனவும் வழங்குவர் கூத்த நூலார். இது காலடி இழிபாகப் பன்னிரண்டு அடி உயர்வாக இடை வரும் அடி எல்லாவற்றிலும் வரப் பெறும் என்பர் ஆசிரியர். எருத்தம் என்றும் வழங்கப் பெறும். எருத்தம். பிடரி. தாழிசையாவது, தாழம்பட்ட இசையுடையதாய் அடிகளாலே தரவினின்றும் தொகை குறைந்து கலிப்பாவின் இரண்டாம் உறுப் பாய் நிற்பது. இது பதினோடி முதல் இரண்டடிகாறும் இழிந்து வசப்பெறும். இதனை இடைநிலைப் பாட்டு என்றும் வழங்குவர். தனிச்சொல்லாவது, தனியே சொல்லப்படும் ஒரு சீராய்ப் பொருள் நிரம்பி விட்டிசைத்துப் பெரும்பாலும் சுரிதகத்தின் முன்னே கிற்பது. விட்டிகை, கூன், தனிநிலை, அடைகிலை’ என்றும் இதனை வழங்குவர். விட்டிசை . ஒரோசையினின்று மற் றோரோசை விட்டு இசைக்கப்படுவதற்குக் காரணமாக இருப்பது. கூன் - நேர்மையாக வந்த ஓசை சுரிதகத்தோடு பொருந்தாமல் தடைப்பட்டு வளைதற்குக் காரணமாக உள்ளது. கூன் - வளைவு. அடைநிலை என்பது, முன்னும் பின்னும் பிறவுறுப்புகளை அட்ைக் தன்றி வாராதது. சுரிதகமாவது, தனிச் சொல்லுக்குப் பின்னே அகவற்பா, வெண்பா என்னும் இரண்டனுள் ஒன்றாய வந்து கலிப்பாவின் 21. செப்பு. - நூற். 128 (இளம்.! 22. டிை - நூற். 129 (இளம்.)