பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்று கூறுவர் தொல்காப்பியர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Space argir gwib Time என்றும் குறிப்பிடுவர். இவை இரண்டும் உலகத் தோற்றத்தைப்பற்றிய கருத்துகளையும் இப்பூமண்டலத் தின் இயக்கத்தையும் விளக்குவதற்கு மிகவும் முக்கியமானவை. இவை இரண்டனையும் தொடர்புபடுத்தி ஐன்ஸ்டைன் என்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதை ஒப்பு நோக்குக் கொள்கை' என்ற புதிய கொள்கையைக் காட்டியுள்ளார். ஒரு செய்யுளில் முதற் பாருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று: பொருள்களும் வந்தால், அப்பாட்டின் முதற்பொருளைக்கொண்டே தினை கூறப்பெறும் என்றும், முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டு பொருள்கள் வந்தால், அப்பாட்டின் கருப்பொருளைக் கோண்டு திணை குறிக்கப்பெறும் என்றும் இளம்பூரணர் குறிப் பிடுவர். உரிப்பொருளே பாடலின் உயிர்நாடியாக இருக்கும் என்பதைப் பாடலைப் படிப்பவர்கள் எளிதில் உணர்வர். முதற்பொருள் - கானிலப் பிரிவுகள் : தமிழர்கள் நிலத்தை கான்கு பிரிவாகப் பிரித்துள்ளனர். அவர்கள் காட்டையும் காடு சார்ந்த இடத்தையும் முல்லை என்று பெயரிட்டு வழங்கினர். மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று பெயரிட்டனர். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்று வழங்கப்பெற்றன. மணலும் மணல் சார்ந்த இடமும் நெய்தல் என்று குறிப்பிடப்பெற்றன. தொல்காப்பியர் இவற்றை முறையே. காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெரும் புனல் உலகம் என்று குறிப்பிடுவர். இவற்றைத் தவிர ஐந்தாவது கிலம் ஒன்று உண்டு. இதனைப் பாலை என்று தமிழ் நூல்கள் வழங்கும். தமிழ் காட்டில் இவ்வகை நிலம் இல்லை. இயற்கை மாறுபாட்டால், பருவ மழை பெய்யாது விளங்குன்றிய காலத்தில், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தன் இயல்பை இழந்து புதிய தோர் தன்மையைப் பெறும், அத்தன்மையையுடைய நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று வழங்கினர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து கல்லியல்பு இழந்து கடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும் ே என்ற சிலப்பதிகாரப் பகுதியால் இது கன்கு விளங்கும். இந்த முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற பெயர்கள் அந்தந்த, 5. 9 Ju Gărăgă Garciraps—Theory of Relativity. 6. சிலப் காடுகாண் காதை, அடி 64-66