பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளர்ச்சி 3ざ殻 ஒருபொருள் துதலி: சூத்திரத் தானும் இனமொழி கிளந்த ஒத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படிக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கனை மாயின் இயலும் என்ப.' என்ற நூற்பாவால் விளக்குவர் ஆசிரியர் தொல்காப்பியர். இது நூலின் அமைப்பினைப்பற்றிக் கூறும் நூற்பாவாகும். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று உறுப்பினை அடக்கி கிற்கும். அகத்தியத்தைப் பிண்டத்தினை அடக்கிய வேறொரு பிண்டம் என்று கூறுவர் கச்சினார்க்கினியர். இவற்றையெல்லாம் எண்ணும்பொழுது நூல் என்பது இலக்கணத்தையே குறிக் கின்றது என்பது தெரியவரும். தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இக்காலத்தில் காம் உரை கடை (prose) என்று வழங்கும் நூல்கள் அவ்வளவாக இருக்ததில்லை. பண்டையோர் அனைத்தையும் செய்யுள் கடை யிலேயே அமைக்கும் நெறியைப் பின்பற்றி வந்த தாலும், இக்காலத் திலுள்ளனபோல் எழுது கருவிகளும் பிறவும் அக்காலத்தில் இல்லையாதலாலும் அக்காலத்தில் உரைகடைச் செல்வங்கள் அதிக மாக வளரவில்லை என்று ஒருவாறு ஊகிக்கலாம், இதைப்பற்றிய விவரங்களை உரைநடை வளர்ச்சிகைப்பற்றிக் கூறும் அறிஞர் நூல் களில் கண்டு கொள்க. எனினும், ஒருசிறிது வழங்கினவற்றை ஆசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் குறிப்பிடுகின்றார். பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள் மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த ககைமொழி யானும் என்று உரைவகை கடையே கான்கென மொழிப.* என்ற நூற்பா உரையின் பாகுபாட்டினை உணர்த்துகின்றது. பல சொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழுவிய வற்றைப் பாட்டென்றும் ஒசையின்றிச் செய்யுள் தன்மையதாய் வருவதை நூல் என்றும் குறித்த தொல்காப்பியர், அவ்வகையின்றி வரும் உரைத்திறனை மேற்காட்டிய நூற்பாவில் குறிப்பிடுகின்றார் 12. செய்ய நூற். 161 (இளம்) 13. இவ்வாசிரியரின் தமிழ் பயிற்றும் முறை என்னும் நூலில் இவ்வரலாறு ஒரளவு சுருக்கமாக ஆராயப்பெற்றுள்ளது. பக்கம் 392-396 பாக்க. (மூன்றாம் பதிப்பு 14. செய்யு . நூற். 166 (இளம்.)