பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (2) விளித்லென்பது முதல் நூலில் தொகுத்துச் சொல்லப் பெற்றவற்றை விரித்து விளக்குதல், எ - டு. இக்காலத்தில் பல துறைகளிலும் வெளிவரும் விளக்க நூல்கள் போன்றவை. (3) தொகை விரி என்பது, முதல் நூலில் விரிவாக உள்ளன வற்றைச் சுருக்கியும், சுருக்கமாக உள்ளனவற்றை விரித்தும் மக்களுக்கு விளங்கும் முறையில் எழுதுதல். எ டு. இன்று அமெரிக்க நாடுகளிலிருந்து பல துறைகளிலும் வெளிவரும் பல்வேறு நூல்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். (4) மொழிபெயர்த்து அதர்ப்பட பாத்தல் என்பது, வேறு மொழிகளில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுதல். எ டு. ஆங்கிலம், குசராத்தி, இந்தி, மராத்தி, வங்காள மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளிவரும் சிறுகதை இலக்கியங்கள், புதினங்கள் : ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலிருந்து அறிவியல் போன்ற பல்வேறு துறை களில் மொழி பெயர்க்கப்பெற்று வெளிவரும் தமிழாக்க நூல்கள். சிறந்த நூல்கள் எம்மொழிகளிலிருப்பினும் அவற்றை மொழி பெயர்த்துக்கொள்ளும் உயரிய நெறி தமிழர்களிடமிருந்தது. என்பதற்கு இது போதிய சான்றாகும். இடைக்காலத்தில் வடமொழியிலிருந்து தமிழுக்குப் பல நூல் கள் வந்தன. இன்று மேல் நாட்டு மொழிகளிலிருந்து பெயர்க்கப்பெற்று வெளி வந்து கொண்டுள்ளன. இன்னும் இக்த மனப்பான்மை நம்மிடம் விரிய: வேண்டும். மொழிப்பற்றுடைய பல மொழியினரும் தங்கள் இலக்கியங்களை வளர்ப்பதற்கு மொழி பெயர்த்து அதர்ப்பட பாத்தல்” முறையைப் பின்பற்றுதல் வேண்டும். _చ్గా చీజ్ மக்களுக்குள் ஒற்றுமையும் பண்பாட்டுத் தொடர்பும் வளர வேண்டு மாயின் ஒவ்வொரு மொழியிலும் தோன்றும் சிறந்த இலக்கியங்கள் யாவும் ஏனைய மொழிகளிலும் பரவுதல் வேண்டும். தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழரின் பண்பு இற்றைத் தமிழருக்கும் முற்றிலும் பொருந்தும். பல துறைகளிலும் ஒர் எழுச்சியை ஏற்படுத்திய பாரதியார், - சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று கூறி, கலைத்துறையிலும் அறை கூவி அழைப்பதைக் காண்மின். மேலும் அவர்,

  • பிறகாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் ப்ெயர்த்தல் வேண்டும்.”