பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் உலகம் 15. கிலப்பகுதிகளில் காணப்பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், கெப் தல் என்ற மலர்களின் பெயரால் வழங்கப்பெற்றன என்பதும், நாளடைவில் அவற்றில் நிகழும் ஒழுக்கத்திற்கும் அப்பெயர்களே வழங்கலாயின என்பதும் இளம்பூரணரின் கருத்து. ஆனால், நச்சினார்க்கினியர் முதலில் ஒழுக்கத்திற்கே அப்பெயர்கள் அமைந் தன என்று கூறுவர். முதற்பொருள் காலம் : முதற்பொருளின் மற்றொரு பகுதி யாகிய காலத்தைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் தமிழ் நூலார் பகுத்துப் பேசுவர். பெரும்பொழுது என்பது, ஒராண்டினை ஆறு பிரிவாகக் கூறிட்ட பகுதிகள். அவை கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பவை. கார் என்பது, மழை பெய்யும் காலம், அஃது ஆவணித்திங்களும் புரட்டாசித்திங்களும், கூதிர் என்பது, குளிர் காலம்; அஃது ஐப்பசித்திங்களும் கார்த்திகைத்திங்களும். முன்பனிக் காலமாவது, மார்கழித்திங்களும் தைத்திங்களும். பின்பனியாவது மாசித்திங்களும் பங்குனித்திங்களும். இளவேனில் என்பது, சித்திரையும் வைகாசியும் சேர்ந்த காலப் பகுதி. ஆனியும் ஆடியும் சேர்ந்த காலப் பகுதி முது வேனில் என்பது. சிறுபொழுது என்பது, ஒரு காளினை ஆறு கூறிட்ட பகுதிகள். இவற்றை வைகறை, விடியல், எற்பாடு, நண் பகல், மாலை, யாமம் என்று குறிப்பிட்டுள்ளனர். வைகறை. என்பது, இராப்பொழுதின் பிற்கூறு விடியலாவது, பகற்பொழுகின் முற்கூறு: எற்பாடு? என்பது, பகற்பொழுதின் பிற்கூறு: நண்பகலா வது, பகற்பொழுதின் நடுக்கூறு: யாமம் என்பது இராப்பொழுதின் கஇக்கூறு. இங்ங்னம் ஐந்திணைக்கும் பெரும்பொழுது சிறுபொழுதுகள் பகுக்கப்பெற்றது அவ்வங்கிலத்திற்கேற்ப இப்பொழுதுகள் தலை வன் தலைவியர் மாட்டுத் தோன்றும் காமக் குறிப்பைச் சிறப்பித்தல் பற்றியாகும் என்பது உணர்தற்பாலது. இதுபற்றி இளம்பூரணர் இவ்வாறு கூறுவர் : “இவ்வாறு வகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னையெனின், சிறப்பு நோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், முல்லை 7. எற்பாடு - எற்பாட்டைப் பிற்பகல் என்று உரைப்பர் நச்சினார்க்கினியர். எல் - சூரியன்; சூரியன் படுகின்ற காலம், சிவஞான முனிவர் எற்பாட்டை “ஞாயிறு உதயமாகும் நான் வெயிற் காலை எனக் கூறுவர். (தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி என்ற நூலினைப் பார்க்க). பாடு - உண்டாதல் என்பது. இவர் கொள்ளும் பொருள், இவர்க்குச் சிறுபொழுது ஐந்தென்பதே. கொள்கையாம்.