பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. செய்யுளின் உறுப்புகள்-(2) இதற்கு முன்னர் மூன்று கட்டுரைகளில் தனி கிலைச் செப்யுட்கு உரியனவாகக் கூறப்பெற்ற பன்னிரண்டு உறுப்புகனை ஆராய்க்தோம். இனி, எஞ்சியுள்ள பதினான்கு உறுப்புகளையும் ஈண்டு ஆராய்வோம். 13. திணை : செப்புளிற் கூறப்பெறும் ஒழுகலாறுகளை அகத்தினை, புறத்திணை என்று பாகுபடுத்தி அறிதற்குரிய கருவி கதினை' என்று வழங்கப்பெறும். அத்தினையாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், கெய்தல், பெருங் இணை என்னும் ஏழு திணைகளும் முறையே மேற்சொல்லப்பட்டன என்பர் ஆசிரியர். கைக்கிளை முதலா ஏழ்பெருங் திணையும் முற்கிளத் தனவே முறையி னான ' என்ற நூற்பாவினால் இதனை அறியலாகும். முறைமையினாற் சொல்லுதலாவது: பாடாண்பாட்டினைக் கைக்கிளைப் புற மெனவும், வஞ்சியை முல்லைப் புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப் புறமெனவும், வாகையைப் பாலைப் புறமெனவும், உழிஞையை மருதிப் புறமெனவும். தும்பையை கெப்தற் புற மெனவும் ஒதிய நெறி கொள்ளப்பெறும். இவ்வாறு கொள்ளவே, பதினான்கு திணையும் எழாகியடங்கு மாயின’ என்று விளக்குவர் இளம்பூரணர். இவற்றின் விவரங்கள் யாவும் முன்னைய கட்டுரை களில் விரிவாக விளக்கப்பெற்றன. - 14. கைகோள் : இஃது அகத்தினையொழுக்க விகற்பமாகிய களவு, கற்பு என்னும் பாகுபாடுகளை அறியச் செய்தல். கைகோள் என்பது ஒழுக்கங்கோடல் என்பர் பேராசிரியர், களவு, கற்பு என்பனவற்றைபபற்றி முன்னர் விளக்கப் பெற்றது.8 15. கூற்று செய்யுள் கேட்டாரை இது கூறுகின்றார் இன்னார் என உணர்வித்தல் கூற்று எனப்படும். இதன் கூறுபாடு 五 செய்யு. - நூற். 177 (இளம்.) 2. ை- நூற். 188 (பேரா.) 3. இந்நூல். 7ஆவது கட்டுரை. பக். 57-68