பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 18. கலம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்திலும் நிகழ்கின்ற கிகழ்ச்சி ஆராய்ந்துணருமாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அது காலம் என்னும் உறுப்பாகும். இறப்பே நிகழ்வே எதிர தென்னும் திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப் பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும்.' என்பது ஆசிரியர் கூறும் விதி. பெரும்பொழுதும் சிறுபொழுதும் முதல், கரு, உரிப்பொருள் என்பவற்றோடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேறாகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுக் காலம் என்றார். அண்ணாங் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த கன்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர ! என்ற நற்றிணைப் பாட்டில் (நற் - 10) கிகழ்காலம் இளமைப் பருவம் என்பன தோன்ற வந்தது. மேலும் இதனுள், நீத்த லோம்பு மதி' என்பது எதிர்காலம் குறித்து நின்றது காண்க. 19. பயன் சொல்லிய சொல்லால் பிறிதொன்று பயப்பச் சேய்தல் பயன் என்னும் உறுப்பாகும். இது கனி பயக்கும் இதன்மா றென்னுங் தொகுகிலை கிளவி பயனெனப் படுமே..? என்று இதற்கு விதி செய்து காட்டுவர் ஆசிரியர். எ டு. சூல்ே பம்பிய சிறுகான் யாறே சூரல் மகளிர் ஆர்ணங் கினரே வாரல் வரினே யான சுவலே சாரல் காட தீவர லாறே. இதனாற் பயன் வரைந்துகோடல் வேண்டுமென்பது. புறத்திற்கும் இஃது ஒக்கும். இவ்வகையினால் யாதாயினுமொரு செப்பு ளாயினும் பயன்படக் கூறல் வேண்டுமென்பது கருதிப் பயன் என ஒரு பொருள் கூறினார்’ என்பர் இளம்பூரணர். Tசெப்பு:நூற். 194 (இளம்.) 12. -ைநூற். 195 (இளம்)