பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள் - (2) 377 என்ற திருக்கோவையாரில் திணை குறிஞ்சி, கைகோன் களவு: கூற்று தலைமகன் கூற்று கேட்பது : நெஞ்சு. நெஞ்சென்டது பாட்டின்கண் இல்லையாலோவெனின், எஞ்சிற்றென்பதாம்; வறிதிே கூறினான் எனினும் அமையும் ; இடம் : முன்னிலை : காலம் நிகழ் காலம் ; எச்சம் : இப்பெருங் தோளி படைக்கண்களேன்.புதி இவ்வென்னுஞ் சுட்டுச்சொல்லெஞ்சிற்று:மெய்ப்பாடு உவகையைச் சார்ந்த பெருமிதம் : கண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் கண்ணினான் யாப்புற வறிதல். என்னை : 'கண்ணினுஞ் செவியினுந் திண்னிதி லுனரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் இன்னயப் போருள்கோ ளெண்னருங் குரைத்தே' " என்றாராகலின். பயன் தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல். பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி படைக்கண்க ளென்றமையின், அ வ ளு - ம் பாட் டு க் குறிப்பு அவள் காட்டத்தானுணர்ந்தானென்பது. என்னை ? “காட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.”* என்றாராகலின்’ என்று பேராசிரியர் திணை முதலியவற்றால் துறையை உணர்த்துதல் காண்க. 25. மாட்டு : மாட்டென்பது, பல்வேறு பரப்பிற்றாயினும் அன்றாயினும் கின்றதனொடு வந்ததனை ஒரு தொடராகக் கூட்டி முடித்துக்கொள்ளச் செய்தல், மாட்டுதலாவது, தனித்து கிற்பதனைக் கொண்டுவந்து கூட்டி முடித்தல் என்று பொருள்படும். இது மேற்கூறிய கோள்’ என்பதன்பாற்படுவதேயாம். அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.28 என்பது தொல்காப்பியனாரின் விதி. செய்யுளிடத்தே கூறப்பெறும் பொருள் சேய்மைக்கண்ணே கிடப்பினும், அன்றி, அணுகிய கிலை கிலையில் கிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும் 23. மெய்ப்பாட்டி - நூற். 27. (இளம்.) 24. களவியல் - நூற். 5 (இளம்.) 25. செய்யு. - நூற். 202 (இளம்.)