பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை படி கொண்டுவந்து இயைத்துணர்த்துதல் மாட்டு" என்னும் உறுப் பாகும் என்து சொல்வர் செய்யுள் வழக்குணர்ந்த அறிஞர் என்பது இதன் பொருளாகும். எ டு. பட்டினப்பாலையில்.: முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே (அடி 218 - 20) என நின்றது. பின்னர், வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் றோளே.(அடி 300 - 1) எனச் சேய்த்ததாகச் சென்று பொருள் கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருள் முடியத் தக்து உரைத்ததாகும். திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடிற் பெரிதாம் எதம்-உறந்தையர்கோன் தண்ணா மார்பிற் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு என்ற முத்தொள்ளாயிரப்பாடலில் உள்ளது அணுகிய கிலை எனப்படும். இதனைப் பிற்கால இலக்கண நூலார் பூட்டுவித் பொருள்கோள் என வழங்குவர். 28. வண்ணம் : பாவின்கண்ணே திகழும் ஒசை விகற்பமாகிய சந்த வேறுபாடு இன்னம் என்று வழங்கப்பெறும் வண்ணமாவன, ப; அவண்ணம் முதல் முடுகு வண்ணம் ஈறாக இருபது வகைப்படும் என்பர் ஆசிரியர்.23 அவற்றுள், பாஅவண்ணம் என்பது, சொற்சீரடியினை உடைய தாதி நூலின்கண் பயின்று வரும் நூற்பாவினது ஒசை விகற்ப மாகும். தாஅவண்ணம் என்பது, எதுகை இடையிட்டமையத் தொடுக்கப்படுவதாகும். வல்லெழுத்து மிக்குப் பயின்று வருவது வல்லிசை வண்ணம் எனப்படும். மெல்லெழுத்து மிகுந்து வருவது மெல்லிசை வண்ணமாகும். இ.ையெழுத்து மிக்கு வருவது இயைபு வண்ணம் என வழங்கப்பெறும், அளபெடை பயின்று வருவது 26. இது 301 அடிகளைக் கொண்ட பாட்டு. 27. செய்யு. - நூற். 205 (இளம்.)