பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-(2) 373 அளபெடை வண்ணமாகும். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும். குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாகும். சித்திரவண்ணம்ாவது, நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவது. ஆய்தம் பயின்று வருவது கலிபு வண்ணமாகும். அகப்பாட்டு வண்ணம் என்பது, முடியாத தன்மையின் முடிந்ததன் மேலது. அஃதாவது, பாட்டினது முடியினை விளக்கி வரும் ஈற்றசை ஏகாரம் முதலியவற்றால் முடியாது. இடையடிகள் போன்று முடியாத தன்மையால் முடிந்து கிற்பதாகும். புறப்பாட்டு வண்ணமாவது, முடிந்தது போன்று முடியாதாகிவருவது. அஃதாவது, பாட்டின் முடிபினை புணர்த்தும் இறுதிபடி புறத்தே விற்கவும் அதற்குமுன் உள்ள இடையடி முடிந்தது போன்று கிற்பதாகும். ஒழுகிய ஒசையால் செல்வது ஒழுகு வண்ணமாகும். நீங்கின தொடையாகி அமைந்தது ஒரூஉ வண்ணமாகும். *யாற்றொழுக்கு போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணமாம்" என்று பொருள்கொள்வர் பேராசிரியர், எண்ணுப் பயின்று வருவது எண்ணு வண்ணமாகும், அறுத்தறுத்தொழுகும் ஒசையினதாய் வருவது அகைப்பு வண்ணம் எனப்படும். அறுத்தறுத்தொழுகு தலாவது, விட்டு விட்டுச் செல்லுதல். ஒருவழி கேடில் பயின்றும்: ஒரு வழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பு என்பர் துரங்கலோசைததாகி வருவது துரங்கல் வண்ணமாகும். இதில் வஞ்சியுரிச்சீர் பயின்று வரும். சொல்லிய சொல்லினாலே சொல்லப் படும் பொருள் சிறப்பச் செய்வது எந்தல் வண்ணமாகும். ஏந்தல் . மிகுதல்; அஃதாவது, ஒரு சொல்லே மிக்கு வருதல். அராகக் தொடுப்பது உருட்டு வண்ணம் ஆகும். அசாகமானது. உருட்டிச் சொல்லப்படுவது. கெகிழாது உருண்டவோசைாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டுவண்ணம் எனப்பட்டது' என்பர் பேராசிரியர். காற்சீரடியின் மிக்கு ஒடி ஒரடி உருட்டு வண்ணத்தை பொத்து அராகக் தொடுத்து வருவது முடுகு வண்ணம் எனப்படும். வண்ணங்களாவன இவையேயாம் என்று வரையறை செய்வர் தொல்காப்பியர். - 'குறில், கெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என கிறுத்து, அகவல், ஒழுகிசை வல்லிசை, மெல்லிசை என்ற நான்க னோடும் உறழ இருபதாம். அவற்றைத் துரங்கிசை, ஏக்திசை அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடு உறழ - اسسسسسسس--سس--------------------------سسسسسسسسسهمسه 28. செய்யு, நூற் 227 (பேரா). 29. .ை நூற். 232 (பேசா).