பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை நூறாம். அவற்றைக் குறிலகவற்றுரங்கிசை வண்ணம், நெடிலகவற். நூங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டு வழங்குப.” என இளம்பூரணர் கூறும் விளக்கம்: பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றி அமைந்ததாகும்.' எனினும், நான்கு பாவினோடும் இவற்றை வைத்து உறழவும், அவை மயங்கிய பொதுப்பா இரண்டினோடு உறழவும் நூற்றிருப தாகலும், உயிர் மெய் வருக்கம் எல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் சில: பெயர் கிறிஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாக லும் உடையவாயினும் இவ்விருபது வகையானல்லது சந்த வேற்றுமை விளங்காதென்பது கருத்து" எனப் பேராசிரியர் கூறிய விளக்கமே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தினை நன்கு புலப்படுத்துகின்றது என்பது ஈண்டு உளங்கொள்ளத்தக்கது. மேற்கூறப்பெற்ற இருபத்தாறு உறுப்புகளும் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் - ஒவ்வொன்றன் யாப்பிற்கும் - இன்றி யமையாத உறுப்புகளாகும். 30. செய்யு.-நூற். 226 (இளம்.) - 31. யாப்பருங்கலக் காரிகையும் யாப்பருங்கல விருத்தியும் 32. செய்யு. - நூற். 234 (பேரா.)