பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. காப்பிய வனப்பு கிரிப்பியமென்பது காவ்யம் என்னும் வடசொல் திரிந்த சொல்லாகும், கவியாற் செய்யப்படுவது காவியம். தமிழில் அதனைப் பொருட்டொடர்நிலைச் செய்புள், கதைச் செய்யுள், அகலகவி, தொடர்கடைச் செய்யுள், விருத்தச் செய்யுள் என்று பல்வேறு விதமாக வழங்குவர். கச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி உரையில் அந்நூலைத் தொடர்நிலைச் செய்யுளென்றே கூற வேண்டும் என்றும், காப்பியமென்று கூறுதல் தகாதென்றும் உரைத் தார். முந்து நூல்களிற் காப்பியமென்னும் வடமொழியால் தொடர் நிலைச் செய்யுட்குப் பெயரின்மை அவர் அங்ங்னம் கூறுவதற்கு ஒரு காரணமாகும். அடியார்க்கு கல்லார் பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும், மணிமேகலையிலும் காப்பியம் என்னும் பெயர் வந்ததை எடுத்துக்காட்டி, சொற்றொடர் நிலை பொருட்டொடர் நிலையென்னும் தொடர்கிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென உண்ர்க’ என்று கூறியுள்ள பகுதி நச்சினார்க்கினியர் கூற்றுக்கு ஏற்ற மறுப்பை உணர்த்து கின்றது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் அந்நூலைக் காவியம்’ என்றே கூறுவர். இளங்கோவடிகள் தாம் துறந்து இக்காவியம் செய்தார்: "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்பாட்டும் உரையும் கலந்து வந்த காவியம்’ என்ற பதிகவுரைப் பகுதி களை நோக்குக.

தமிழ்க் காப்பியங்கள்’ என்ற நூலின் ஆசிரியர் பொருட் டொடர்நிலைச் செய்யுள்களை அவற்றின் சிறப்பு நோக்கி மூன்று வகையாகப் பிரிப்பர். அவை : (1) பொருள் மட்டும் தொடர்ந்து கதை தழுவாது வரும் தொடர்நிலைச் செய்யுள். இவ்வகையில் பத்துப்பாட்டும் பொருட்டொடர்பையுடைய பிரபந்தங்களும் அடங்கும். (2) பொருள் தொடர்ந்து கதை தழுவி வருவன்வற்றுள் அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கனுள் சிலவற்றையே பயனாக உடையன. இவ்வகையில் மணிமேகலை, நீலகேசி, பெரிய புராணம், புராணங்கள் முதலியன அடங்கும். (3) கதை தழுவி வருவதோடு அறம், பொருள், இன்பம், வீடு என்ற காற்பொருளை யும் கூறுவன. இதில் பெருங்காப்பியங்களும் நாடகக் காப்பியங் களும் அடங்கும். ---

1. ஜகந்நாதன், கி. வா. தமிழ்க் காப்பியங்கள் பகுதி 3.