பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுவதிலும் ஒரிடத்தில்தான் தொடர்கிலை என்ற தொடர் வழங்கப் பெற்றுள்ளது. மாட்டும் எச்சமும் காட்ட மின்றி உடனிலை மொழியினும் தொடர்கிலை பெறுமே..? என்ற நூற்பாவில் இதனைக் காண்க. 'தமிழ் இலக்கியச் சரிதத்தில் காவிய காலம்' என்ற நூலின் ஆசிரியர் தொல்காப்பியருக்குக் காவியம் உளதென்றேனும், அது தொடர் கிலை என்ற குறியீட்டி னால் அவரால் வழங்கப்பெற்றதென்று கொள்ளுதல் சிறிதும் பொருக்துவதன்றாகும் என்று கூறுவர். பிற்காலத்தில்தான் - சுமார் 18 ஆம் நூற்றாண்டளவில் - காவியம் என்ற கருத்துத் தமிழில் புகுந்ததென்றும், 11-ஆம் நூற்றாண்டளவில் காவியம்’ என்ற வடசொல்லையே தமிழில் அமைத்தனர் என்றும், 12-ஆம் நூற்றாண்டளவில்தான் இச்சொல்லுக்குப் பதிலாகத் தொடர் கிலை என்பதை வழங்கலாயினர் என்றும், கோவியம்’ என்ற குறியீடே சிறந்ததென்றும் தம் கொள்கையை நிறுவுவர் திரு. பிள்ளை அவர்கள். அது கிடக்க. தொல்காப்பியத்தில் செய்யுள் உறுப்புகளாகக் கூறப் பெற்றுள்ள முப்பத்து நான்கு உறுப்புகளில் தனிச் செய்யுட்கு உரியனவாகவுள்ள இருபத்தாது உறுப்புகளை முன்னர்க் கண்டோம்." அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுக் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென் வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே." என்ற நூற்பாப் பகுதியில் வரும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டு உறுப்பு களும் தனிகிலைச் கெப்யுட்கேயன்றித் தொடர்கிலைச் செய்யுட்குச் சிறப்பாக உரியன என்பது பேராசிரியர், கச்சினார்க்கினியர், அடியார்க்கு கல்லார் ஆகிய மூவரின் கருத்தாகும். 2. செய்யு. நூற். 203 (இளம்.) 3. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை ; காவிய காலம், பக். 270 - 27.2. 4. இந்நூல் - 26, 29 கட்டுரைகளில், 3. செப்பு - நூற். 1. (இளம்.)