பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘3蕊氢 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை சிலவாதல், சுருங்கின எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல். மெல்லியவாதல், சிலவாகிய அச்சொற்களும் பல எழுத்து களாலியன்று விரிந்தனவாகாமல் சிலவெழுத்துகளாலமைந்து சுருங்கி நிற்றல். இச்செய்யுள்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றற்கும் இலக்கணம் சொல்லுமென்றும், பதினெண்கீழ்க் கணக்கு அவ்வனப்பமைந்த நூல்கள் என்றும் இவர் கூறுவர். இந்த வனப்பையுடைய நூல்கள் நீதிநூல்களாம், வடமொழியிலும் நீதி சாத்திரங்கள் உள்ளன; அவை காப்பியங்களாகக் கொள்ளப் பெறவில்லை. - 2. அழகு : திரிசொல் பயிலாது செய்யுளுட்பயின்று வரும் சிறந்த சொற்களால் ஒசையினிதாகச் சீர் பெற பாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகு எனப்படும். செய்யுள் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே.8 என்பது தொல்காப்பியரின் விதி. இவ்வனப்புக்கு நெடுக்தொகை முதலாகிய எட்டுத்தொகை நூல்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்வர் பேராசிரியர். செப்புளின் நடையழகு கோக்கி அமைந்தது இவ்வனப்பு. மேலும், அம்மை தாய பனுவல்’ என்றும் (தாவுதல்இடையிடுதல்), அழகு அத்தகையதன்றென்றும் அம்மையைப்போல், அறம் முதலாகிய மூன்றும் சொல்லப்படுவன அல்லவென்றும் பேராசிரியர் கருதுவர். இவ்வனப்புக்குக் காட்டிய எடுத்துக்காட்டு பற்றி ஆராய்ந்தால் இதுவும் காப்பியத்திற்குரியதன்றென்று தோன்றுகின்றது. அம்மையும் அழகும் தனி நிலைச் செய்யுள்கள், தொடர்நிலைச் செய்யுள்கள் என்பவற்றில் அமைந்த இலக்கணம் என்று கோடலும் ஏற்புடைத்து. 3. தொன்மை உரையொடு பொருந்திப் போந்த பழமைத் தாகிய கதைப்பொருளாகச் செய்யப்பெறுவது தொன்மை என்ற வனப்பாகும். தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்க்த பழமை மேற்றே. என்பது தொல்காப்பிய விதி. உரையொடு புணர்தல்- நெடுங் 8. செய்யு-நூற். 228 (இளம்.) 9. -ைநூற். 229 (இளம்)