பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386, தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இதனால், பல பாட்டுகளாலேனும் தொடர்ந்து வரும் ஆசிரியப்பாவினாலேனும் இயற்றப்பெறும் காப்பியமே தோல்’ என்பது பெறப்படும். இழுமென் கொழி, பரந்த மொழி என்பன யாப்பையும் நடையையும்பற்றிய இலக்கணமாகும்; விழுமியது துவலுதல் பொருள் அமைப்பின் இலக்கணமாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்பன விழுமிய பொருள். இந்நான்கையும் பொருளாக உடையதே தோல் என்ற காப்பிய அமைப்பு. கபாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது' எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சிவகசிந்தாமணி போன்ற தொடர்நிலைச் செய்யுள்கள் இழுமென் மொழியால் விழுமியது துவன்ற தோல்’ என் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப் பாட்டால் ஒரு கதை மேல் தொடுக்கப்பட்ட தொடர்கிலைச் செய்யுள்கள் பரந்த மொழி பால் அடியிேர்க்தொழுகிய தோல் என்னும் வகையின்பாற்படுவன: எனவும் கச்சினார்க்கினியரும் பேராசிரியரும் கூறுவர், இவர்களிரு வரும் தோலென்பது ஒரு கதிைமேல் தொடுக்கப்பட்டதென்று: குறித்தனர். அடியார்க்கு கல்லார் சிலப்பதிகார உரை யி ன் கண் தொல்காப்பியமே சிலப்பதிகாரத்துக்கு இலக்கணம் என்று கூறுவர். மேலும், அவர், இழுமென்.ஒழுகினும் என்பதனால், குவிந்து இமல்லென்ற சொல்லானும், பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயபடி ஒரு கதைமேற்கொச்சகத்திானும், ஆசிரியத்தானும், வெண்பாவானும், வெண்கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுள்களானும் கூறுக என்றமையான், இத்தொடர்நிலைச் செய்யுள் அங்ங்னம் கூறிய தொடர்கிலை என உணர்க’ எனத் தோலின் இலக்கண நூற்பாப் பொருளை விரித்து உரைத்திடுவர். தொன்மையும் தோலும் பொருளமைப்பில் ஒருவகைப்பட்டன: யாப்பு முறையில்தான் அவை வேற்றுமையுடையன. தொன்மை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்ளாதலின் அது தனியே வகுக்கப் பட்டது. தோல் பல குறுஞ்செய்யுள்களால் அமைந்தது, சில நெடுஞ் செய்யுளால் அமைந்தது என இரண்டு வகைப்படும். இவற்றைப் பற்றியே உரையாசிரியர்கள் பலவாறு கூறுகின்றனர். தொன்மையும் தோலும் ஒரு பழங்கதைப் பொருளாக இயற்றப்பெறுவனவாதலின், அவை கதைச்செய்யுளாகும். காப்பியப் பொருள் ஒவ்வொரு நாட்டிலும் வழங்கி வரும் பழைய கதைகளையே அங்காட்டுக் கவிஞர்கள் காப்பியங்களாக அமைப்பர். இத்தகைய முறையே நாகரிகம் மிக்க நாடுகளில்