பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392; தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. கிலைமையில் அமைந்தன. இவற்றின் இயல்புகளை நுண்ணிதின் விளக்குவனவாகிய இம்மரபுச் சொற்களின் பொருள் நிலை மாறு: படாதவாறு உலக வழக்கினையும் செய்யுள் வழிக்கினையும் போற்றிக் காத்தல் வேண்டுமென்பது தொல்காப்பியனாரின் கருத்து. இளமைப் பெயர்கள் : முதலாவதாக, இளமைப் பெயர்களை நோக்குவோம். பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என வரும் இவ்வொன்பதும் இளமைப் பண்பு. பற்றிய மரபுப் பெயர்களாகும். இவை, மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென் றொன்பதும் குழவியொ டிளமைப் பெயரே." என்ற நூற்பாவில் உணர்த்தப்பெறுகின்றன. மேலும், இன்னின்னவற்றுக்குரியன என்று மரபியல் 4 முதல் 26 வரை புள்ள நூற்பாக்களால் வகுத்துக் காட்டுவர் ஆசிரியர். பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் பறப்பவற்றின் இளமைப் பெயர்களாகும். இவை இரண்டும் ஊர்வனவற்றிற்கும் உரியன வாகும் என்று விதி செய்வர் ஆசிரியர். அவை ஆமை, உடும்பு, ஒக்தி, முதலை முதலாயின என்று விளக்குவர் பேராசிரியர். மூங்கா (கீரி), வெருகு (காட்டுப் பூனை), எலி, அணில் என்னும் இவை நான்கும் குட்டி என்ற பெயர்க்குரியன. அஃதாவது, இவை மூங்காக் குட்டி வெருகுக் குட்டி, எலிக்குட்டி, அணிற்குட்டி என வரும் என்று விளக்குவர். மேலும், அவர், "தத்துவனவற்றிற்கும் குட்டிப் பெயர் கொடுக்கப்படும் , தவளைக் குட்டி’ என வரும். மேல் ஊர்வனவற்றுக்கும் தவழ்வனவற்றிலக் கணம் எய்துவித்தமையாற் பாம்புக்குட்டி’ என்பதும் கொள்க’ என்று விதந்து கூறுவர். நாய் பன்றி, முயல், புலி, கரி என்பவற்றின் இளமைப் பெயர் குருளை என்பதாகும். இவ்வைந்தனையும் குட்டி, பறழ்? என்ற பெயர்களால் வழங்குதலும் உண்டு. இவ்வைந்தனுள் காயல்லாத ஏனைய நான்கிற்கும் பிள்ளை' என்ற பெயரும் உரிய திாகும். அஃதாவது, பன்றிக் குருளை, பன்றிக் குட்டி, பன்றிப் 4. மரபி. - நூற் 1. (இளம்).