பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள்-(1) 395 சுமந்து விற்கும் தெவ்வர் போல நிற்பதை வருணிக்கும் இளங்கோ வடிகள், - ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதிகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் காவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும். மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு' (அசி-சிங்கம், வாள்வரி-புலி; மதகரி - மதயானை: குடா. வடி உளியம் - வளைந்த அடிகளையுடைய கரடி வருடை - மலையாடு : காசறை கத்துரி மான் , நகுலம் கீரி : மஞ்ஞை - மயில் : காவி - புழுகுப்பூனை, கிள்ளை - கிளி.1 என்று கூறுவர். அணங்கு, குருளை, பறழ், களபம், குட்டி, வருடை, மறி, கரு, பிள்ளை என்பன இளமையைக் குறிக்கும் பெயர்கள். இவற்றுள் அணங்கு, களபம், கரு என்ற நான்கும் தொல்காப்பியத்தில் காணப்பெறவில்லை : இவை பிற்காலத்திய வழக்குக்ளாகும். வாள்வரிப் பறழ், குரங்குக் குட்டி முதலிய வழிக்குகளும் தொல்காப்பியத்தில் இல்லை. மேலும், திருத் தொண்டர் புராணத்தில் வன்புலிக்குருளை, வயக்கரிக் கன்று' ன்ன்றும், கடுமுயற்பறழ்', 'கான ஏனத்தின் குட்டி’, ‘கொடுவரிக் குருளை" என்றும் பயின்று வந்திருப்பது ஈண்டு எண்ணற்பாலது. ஆண்யாற்பெயர்கள்: இரண்டாவதாக, ஆண்பால்பற்றிய மரபுப் பெயர்களை நோக்குவாம். ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் ஆண்பால் பற்றிய மரபுப் பெயர்களாகும். இவை, ஏறும் ஏேற்றையுக் ஒருத்தலும் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும் 10. சிலப் - வஞ்சிக்-காட்சிக். அடி (48.55, 11. கண்ணப்ப, புராண - செப் 4. 12. டிை - செப் 26. - * எருது’ என்றும் பாடம்.