பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அகப்பொருள் வழக்கை அழகுபடுத்தியிருப்பதைக் கண்டு மகிழ்க. இங்ங்னமே, கற்றிணை, குறுந்தொகை முதலிய அகப்பாடல் களெல்லாம் ஆராய்ந்து கொள்ளற்பாலன. ஆனால், மேற்கூறியபடி செய்யுள் வழக்கிலன்றி உலக. வழக்கிலாயின், மேற்கூறியபடி அல்லாது தனித்தனியாகவும் வரும் என்று கூறுவர். இப்பாடல்கள் சிலவும் பலவும் வரலாம். ஆனால், உரிப்பொருள் மட்டிலும் கட்டாயம் வருதல் வேண்டும். உரிப்பொருள் இல்லாவிட்டால் இலக்கியமே இல்லை முக்கியமாக அகத்துறையே இல்லை. உரிப்பொருள் மாத்திரம் வந்துள்ள பல பாக்களைத் தமிழர்களின் தலைசிறந்த இலக்கியமாகிய திருக்குறளில் காணலாம், உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்' என்ற குறளில் மருதத்திணை உரிப்பொருளாகிய ஊடலும், ஊடல் கிமித்தமும் வன்து அழகு செய்துள்ளமையை உணர்ந்து, மகிழ்க. - தொல்காப்பியப் பொருளதிகாரம் வெறும் இலக்கியங்களுக்குக் கூறும் இலக்கணம் மட்டும் அல்ல. அது தமிழர்களுடைய வாழ்க்கை மூறைக்கும் இலக்கணம் கூறும் ஒர் ஒப்பற்ற சமுதாய நூல் 2 என்று சொல்லலாம். இப்பொருளதிகாரப் பிரிவினையைச் சற்று. எண்ணிப் பார்த்தால் தொல்காப்பியருடைய பரந்த பார்வையும். ஆழ்ந்த கருத்தும் எளிதில் புலனாகும். பொருளதிகாரப் பிரிவுகள் : உயிர்கள் யாவும் இன்பத்தை காடுதல் கண்கூடு. உணர்ச்சிகளுள் சிறந்தது இன்ப உணர்ச்சி. அவ்வின்பம் காரணமாகத் தலைவன் தலைவிபரக்குள் ஒத்த அன்பின் வாழ்க்கையைக் குறிஞ்சி முதலாகவுள்ள இத்திணைகளுள்ளும், - ஒவ்வாத அன்பினைக் கைக்கிளை, பெருக்திணைகளுள் ளும் அமைத்துக் காட்டுவர் தொல்காப்பியர். அவற்றின் இயல்புகளைப் பொருளதிகாசத்தில் முதலாவதாகவுள்ள அகத்தினை இயல் இயம்புகின்றது. ஒற்றுமையை உணர்த்தும் அகப்பொருள் போலவே, வேற்றுமையைக் குறிக்கும் அறச்செயல்களையும் மறச்செயல் களையும் புறம் என்ற பகுதியில் அடக்கிக் கூறுவர் ஆசிரியர். புறப் பொருளை வெட்சி முதலாகிய ஏழு திணைகளில் பகுத்து விரித்துப் 11. குறள்-1316. - 12. řapgrau grad - Sociological treatise.