பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள்-(1) 39? கபோத்து’ என வழங்கப்பெறுதல் உண்டு. இவை எறிபோத்து, உழுபோத்து. எருமைப் போத்து, புலிப் போத்து, மரைப் பேசத்து. முதலைப் போத்து, :பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து", வாளை வெண்போதது, மயிற்போத்து, காரை கிரை போத்து என்று இலக்கியங்களில் பயின்று வருதலை அறியலாம். இரலை கலை என்ற பெயர்கள் இரண்டும் புல்வாய் என்னும் இனத்துள் ஆண்பாற்கு உரியன. அவற்றுள் கலை என்னும் பெயர் உழை, முசு என்பவற்றிற்கும் உரியவையாகும். அவை புல்வாயிரலை, முதுகலை, பொறிக்கலை, முசுக்கலை, கருங் கட்டாக்கலை என இலக்கியங்களில் பயின்று வருதலை அறிக. மோத்தை", "தகர்', உதள்", "அப்பர் என்ற நான்கு பெயர் களும் ஆடுகளில் ஆண்பாற்கு உரியனவாக வழங்கும். அப்பர்’ என்ற ஆழக்கு கம்மிடம் இன்றுள்ள இலக்கியங்களில் காணப்பெற வில்லை. இதனால் அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்தது போலும்’ என்று குறிப்பிடுவர் பேராசிரியர். மேலும், அவர் கடா என்ற பெயரை யாட்டிற்கும், அப்பர்’ என்பதைக் குரங்கிற்கும் உரியனவாகக் கூறுவர். சேவல் என்ற பெயர் தோகையையுடைய மயிலல்லாத எனைப் பறவையினத்துள் ஆண்பாற்கெல்லாம் ஒப்பவுரியதாகும். இதனைத் தொல்காப்பியர், சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயிலலங் கடையே: என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். "மாயிருக் துவி மயில்’ என்ற தனால், அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயல வாகலான் ஆண்பாற்றண்மை இல என்பது கொள்க’ என்பர் பேராசிரியர். எனவே, தோகையையுடைய ஆண் மயில்கள் சேவல்’ என்ற ஆண்பாற்சொல்லால் வழங்கப்பெறாவாயின. செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அது (சேவல் என்ற பெயர்) கோவும் படும்’ என்று பேராசிரியர் கூறும் அமைதி பிற்கால இலக்கிய வழக்குப் பற்றியதாகும். எழுத்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மே லேறி, ? 16. மரபி. - நூற். 49 (இளம்.) 17. கந்தபுராணம்-தேவகாண தெய்வயானைத்திருமணம்- 192