பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

委G念 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற இருவிளையாடற் புராணத்து அடியில் ஆண் கோழிக்கும் வத்து மாறியமை அறியத்தக்கது. மேலும் குழவி', மகவு என்னும் இவ்விரண்டனைத் தவிர வேறொன்றும் மக்கட்கு இளமைப் பெயர் கனாக உரியதன்று என்று ஆசிரியர் கூறியுள்ளார். இக்காலத்தில் பிள்ளை' என்பதொன்றே பெரு வழக்காயுள்ளது. இனி குட்டி’ என்னும் பேயர் மூங்கா, வெகுகு, எலி, அணில் இவற்றிற்கும் காய், பன்றி, புலி, முயல், கரி இவற்றிற்கும், குரங்கிற்கும் வழங்குதற் குரியது என்றார். ஆயின், இக்காலத்தில் குட்டி என்ற பெயர் பெரும்பாலும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் வ ழ ங் க ப் பெறுகின்றது. குட்டி என்னும் சொல் குருடாயிருப்பது என்னும் பொருளைத் தருவதாகும் : அஃதாவது, பிறக்கும் பொழுது கண் திறவாமலிருப்பது. வெருகு, எலி முதலியவை பிறக்கும்பொழுது கண் திறவாமலிருத்தலின் அவற்றிற்கு அமையும், ஆட்டுக்குட்டி என்பது போன்ற வழக்கு அமையாதன்றே: இன்னும் ஆசிரியர் உள்வயிரமுள்ளவை மரம் என்றும் வெளி வயிரமுள்ளவை புல் என்றும் வழங்கப்பெறும் என்று கூறியுள்ள மரபும் இக்காலத்தில் இல்லை. இவ்வாறே, மரபியலில் கூறப்பெற்ற மரபுப் பெயர்களுள் பெரும்பாலன அவ்வழக்கொழிந்தன. கடைச்சங்க காலத்திலேயே இம்மரபு பிறழ்ந்தொழிந்தது என்பதை அறியின் தொல்காப்பியனார் காலம் அதற்குப் பெரிதும் முற்பட்டதாகும் என்பது தெள்ளிதிற். புலனாகும். இன்னும், சங்க நூல் முதலாக இன்று வரையுள்ள இலக்கியங்களிற் காணப்பெறாத பல இலக்கண வழக்குகள் தோல்காப்பியத்தில் காணப்பெறுதலின், அந்நூலின் பழைமையை ஒருவாறு ஊகித்து உணரலாம். இவ்வாறு பிற்கால வழக்குகளிலும், பிற்கால நூல்களிலும் காலத்திற்கேற்பத் தொல்காப்பிய மரபுகள் மாறிவிடுகின்றன ; இதுகாறும் மாறி வந்தவை பலவாகும். 26. குட்டி என்ற பெயர் மலையாள காட்டில் மக்களின் இளமைப் பெயர்களாக இன்றும் (ஆண் பெண் வேறுபாடின்றி): வழங்கி வருதலைக் காணலாம்.