பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:04. தொல்காப்பீயம் காட்டும் வாழ்க்கை அனையவை பிறவும் மரன்” என்ற வகையைச் சார்க்து வரும் உறுப்பின் பெயர்களாகும். இலையே முறியே தளிரே தோடே சினையே குழையே பூவே அரும்பே கனையே உள்ளுறுத் தனையவை எல்லாம் மரனொடு வரூஉங் கிளவி என்ப.8 என்ற நூற்பாவால் இவற்றை அறியலாம். புறவயிர்ப்பும் உள் வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் முருக்கு, தனக்கு முதலிய ஒரு சாரண இவ்வுறுப்புப் பெயருடைய மரமெனப்படும். புல்லினுள் ஒரு சாசன இலை, பூ முதலிய உறுப்பின் பெயர்களைப் பெறுவன ஆம், புல்லிற்குச் சொல்லப்பட்ட ஈர்க்கு முதலிய உறுப்புகள் சில மரத்திற்கு வருவனவும் வழக்கு நோக்கி உணர்ந்துகொள்ளத் தக்கனவாகும். காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல், மரம் என்னும் அவ் விரு வகைக்கும் உரியனவாகும். இவற்தை, காயே பழமே தோலே செதிளே வீழோ டென்றாங் கவையும் அன்ன, என்ற மரபியல் நூற்பாவால் அறியலாம். தெங்கங்காப். கமுகங் காய் எனவும், வேப்பங்காப், மருதங்காய் எனவும் காப் என்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்பதற்கும் இல்தொக்கும். பனந்தோல், வேப்பக்தோல், பனஞ் செதிள், வேப்பஞ் செதிள், தாழை வீழ், இத்தி வீழ் என இவையும், இருபாற்குரியனவாயின. தோழை பூவுடைத் தாகலாலும் கோடுடைத்தாகலானும், புற வயிர்ப் பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும் பான்மை என்பர் இளம்பூரணர். د '*.*n - சாதி பற்றிய பெயர்கள் : இனி, கால்வகைச் சாதிபற்றிய ենմւք களை ஆராய்வோம். தொல்காப்பிடத்தில் அகத்தினை யொழுக லாற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக் கூறிய கிலையிலும், புறத்தினையொழுகலாற்றில் வாகைத்தினைப் பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை ஆசிரியர் கொல்காப்பியனார் அவர்கள் வாழும் நிலத்தாலும் அவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்தினரேயன்றிப் பிறப்பு வகையால் அன்து என்பது பெறப்படும். 3. மரபி.-நூற்.89 (இளம்.) 4. .ை - நூற். 90 இளம், !