பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 Ó தொல்காங்பியம் காட்டும் வாழ்க்கை வாகைத்திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை வருணத்தாற் பிரித்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப் பியர் மேற்கொள்ளவில்லை. (2) மரபியலில் 1 முதல் 70 நூற்பாக்களும் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் மரபுகளை விவரித்துரைப்பனவாக அமைந்திருக்க, இந்தப் பதினைந்து நூற்பாக்கள் மட்டிலும் இயல் பாக அமைந்த இக்த மரபுத் தொடச் இடையறவு பட்டுச் சிதையும் கிலையில் அமைந்துள்ளன. - (3) உரிப்பொருளாகிய ஒழுகலாறுபற்றிய இச்செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட்பகுதிகளை விளக்கிய அகத் திணையியல், புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களில் கூறத்தக்கனவேயன்றி, மரபுச் சொற்களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற்கமைக்த இம்மரபியலில் இடம் பெறத் தக்கன அல்ல. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம் : (1) தொல்காப்பியத்தை ஊன்றிப் படிப்போர் ஆசிரியர் பிறப்பி னால் சாதிப் பிரிவு செய்யவில்லை என்பதும், செய்தொழில் வேற்றுமையால்தான் அப்பிரிவு அமைந்தது என்றும் அறிவர். இதை மேற்கூறிய நூலின் ஆசிரியரே ஒப்புக்கொண்டுள்ளார். உரை யாசிரியர்கள்தாம் சாதிபற்றிய கொள்கையை வற்புறுத்தி எழுதி யுள்ளனர். சாதி என்னும் சொல் தொல்காப்பியத்திலேயே காணப் பெறினும், அச்சொல் ஓரிடத்திலேனும் மக்களைக் குறிக்கும் சொல் லாக வழங்கப்பெறவில்லை. அதுரிேலே வாழும் உயிர்களையே குறிக் கின்றது. இன்று சாதி என்னும் சொல் பிறப்பிலே வேற்றுமை உண்டு என்பதைக் குறிப்பதாகும். பிறப்பினால் உயர்வுதாழ்வு உண்டு என்ற கொள்கை தொல்காப்பியர் காலத்தில் தமிழ் காட்டில் இல்லை. தொழில், ஒழுக்கம், கல்வியறிவு. திறமை என்ற இவற்றின் காரணமாகவே வகுப்புப் பிரிவுகள் தோன்றின. நாளடைவில் மக்கள் செய்யும் தொழில்களில் சிறுமை பெருமை பாராட்டத்தொடங்கினர். இவையே உயர்வு தாழ்வுகளுக்கு உறை விடமாயின. வடமொழியிலுள்ள வேத - உபநிடத - சுமிருதி 18. சேவாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய. - மரபியல் - நூற். 44 நீர்வாழ் சாதியுள் நந்தும் காகே. - டிை - நூற். 64 சாதி - ஜாதி, ஜம் - பிறப்பு. ஜனித்தல் - பிறத்தல். ஜன்மம் . பிறப்பு -