பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள் - {2} 多丑建 களும் இவ்வுண்மையை ஒப்புக்கொள்கின்றன. சாதிப் பிரிவுகள் தமிழகத்தில் தாமே தோன்றியனவேயன்றி யாராலும் புகுத்திப் பெற்றவையல்ல எனல்ே தோன்றுகின்றது கால்வகைச் சாதி இக்காட்டினில் காட்டினர்’ என்ற கபிலாகவலைச் சான்றாகக் கொண்டு வேண்டாதா மீது வீண்பழி சுமத்துவது அறிவுடைமைக்கு அழகன்று. இன்றுள்ளது போல் அன்றும் சாதிப் பிரிவு பொருளாதார அடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தத்தம் அறிவின் திறனுக்கேற்றவாறு பல தொழில்களை மேற் கொண்டு பொருளிட்டி வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலையும் மேற்கொண்டவர்கள் தமது தொழில் முறைக்கேற்ப அவ்வத்தோழில் செய்வானிடமே கொண்டு கொடுத்து வந்து நாளடைவில் வெவ்வேறு குலத்தினராகி இருக்க வேண்டும். காலப்போக்கில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனக் கருதும் நிலை வந்துவிட்டது. ஒவ்வொருவரும் தம் பேதைமையால் குலப் புராணம் பாடும் இயல்புடையவராக மாறிவிட்டனர். எனவே, சாதிப்பிரிவிற்கு எந்த ஒரு வகுப்பாரும் பொறுப்பல்லர் என்றே தோன்றுகின்றது. (2) மரபியலில் பல்வேறு மரபுகள் கூறப்பெறுகின்றன. அதில் சொல்லதிகாரக் கிளவியாக்கத்து மரபென்று வகுத்து ஒதப் பட்டனவும், பொருளதிகாரச் செய்யுளியலுள் மரபென்று ஒதப் பட்டனவுமன்றி, இருதினைப பொருட்குனனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் உயத்திணையில் மக்களிடையே செய்தொழிலின் காரணமாக வழங்கப்பெலும் வகுப்புபற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும்பற்றிய மரபும், அவைபற்றி வரும் உலகியல் மரபும், நூலின் வகைகளைப்பற்றி வழங்கி வரும் பெயர் மரபுகளும், அவற்றின் பாகுபாடுகளும், அவைபற்றிய பொது இலக்கணங்களும் கூறப் பெறுகின்றன. இம்முறையில் வைத்து கோக்கின், 71 முதல் 85 வரை உள்ள நூற்பாக்கள் இயல்பாக அமைந்துள்ள மரபுத் தொடரை இடையறவுபடச் சிதைப்பனவாகத் தோன்றவில்லை. செப்தொழில் முறையால் மக்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று வழங்கப்பெற்றனர் என்பது தொல்காப்பியரின் காலத்து வழங்கிய மரபு என்பதை ஒப்புக்கொண்டால் இந்த நூற் பாக்களின் அமைப்பும் சரியாகவே அமைந்துள்ளன என்று தோன்றுகின்றது. (3) தொல்காப்பிய அகத்திணையியலிலும் புறத்தினை யியலிலும் கூறப்பெறும் சேய்திகளில் பெரும்பான்மை நாடக வழக் காகவும் சிறுபான்மை உலகியல் வழக்காகவும் கூறப் பெறுபவை :