பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இலக்கியம் செய்யப்பெறுங்கால் அவை இலக்கிய மரபுகளாகக் கொள்ளப்பெறுபவை. அகத்திணையியலில் கருபபொருள்கள் இன்னவை என்பதை விளக்குங்கால் கிலப்பெயரும் தொழிற்பெயரு மாகிய திணை நிலப்பெயர்களால் பிரித்தோதப்பெற்றன. அகத் திணைச் செய்யுளில் இவை மட்டிலும் வரலாம் என்ற வரையறை காட்டவே இங்ஙனம் உணர்த்தப்பெற்றது. புறத்திணையியலில் வாகைத்தினையில் ஒவ்வொருவருடைய தொழிலும் சிறப்பித்துக் கூற பெறுகின்றது. புறத்தினையொழுகலாற்றில் அதற்குரிய தலைமக்களது இயற்பெயர் கூறப்பெறும். இவை யாவும் சாதாரண மக்களைப் பொதுவாக உணர்த்தவே இவ்வாறு கூறப் பெற்றது என்று கொள்ளல் வேண்டும். அக்தனர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவு மேன்மக்களிடம் கிலவியது என்று கொள்ள வேண்டும். இத்தகைய மரபுகள் இருந்தன என்பதை உணர்த்ததே அவை மரபியலில கூறப்பெற்றனவாகும். உரையாசிரியர்கள் தம் காலத்தில் நிலவிய சமுதாயக் கொள்கைகள்பற்றியும், தமக்கு அவற்றிலிருந்த பற்றின் காரணமாகவும் தம்முடைய உரையில் சாதிக் கொள்கைகளை காட்டிவிட்டனர், எத்தனையோ வகையில் பண்டை இலக்கண, இலக்கிய துட்பங்களைத் தெரிந்துகொள்வதற்கு இன்றியமை யாதனவாக உள்ள அவர்களுடைய உரைகள் சில குழப்பங் களையும் உண்டாக்குகின்றன. பிற்காலத்தில் வாழ்க்த தமிழறிஞர் கள் இவற்றை எடுத்துக் காட்டி விளக்கிப் போக்தனர். பொது, வாகத் தமிழ் நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும் படிக்கும் இளைஞர்கள் தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கொண்டு. அவற்றை நோக்காது அறிவியல் மனப்பான்மையுடன் அவற்றை. அணுகிப்பார்த்தல் வேண்டும். இலக்கிய ஆராய்ச்சி செய்வதன் காரணமாக இன்று சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளைக் கொண்டு எவரிடமும் காழ்ப்போ பகையோ கொள்ளுதல் அறி வுடைமையன்று. தம்முடைய கல்வியாலும் ஒழுக்கத்தாலும் பண் பாட்டினாலும் இவ்வேறுபாடுகளைக் கூடியவரை களைந்தெறிந்து. ஒன்றிவாழ்வதே அறிவுடைமையாகும்.