பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.14. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெற்றுள்ள பொறிகளின் வகைகளைப் பொறுத்தே உலகை உணர் கின்றோம் ; நம்மையும் உணர்கின்றோம், காம் ஐம்பொறிகளை விடக் குறைவான பொறிகளைப் பெற்றிருப்பின் காம் இவ்வுல கினைப்பற்றிக் கொள்ளும் கருத்தினையும், இாம் வானொலி அலை தனையும் புதிர்க் கதிர்களையும் அண்டக் கதிர்களையும் உணரக் கூடிய - அதிகமான பொறிகளைப் பெற்றிருப்பின் காம் இவ்வுல கினைப்பற்றிக் கொள்ளும் கருத்தினையும் ஒப்பீட்டுச் சிந்தித்துப் பார்ப்பின் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை இமயமலையினும் மாணப் பெரிதாக இருப்பதை நன்கு உணரலாம். மனிதனுக்கு எத்தனை பொறிகள் உள்ளன என்பதை உள வியலார் இன்னும் திட்டமாக வரையறுக்கவில்லை. ஆயினும், வழி வழி வன்துள்ள 'சுவை, ஒளி, ஊறு, ஓசை, காற்றம்’ என்னும் ஐம் புலன்களுக்கு மேலாக வேறு சில புலன்களும் உள என்பது மட்டி லும் உறுதி, ஐம்பொறிகளின் வாயிலாகச் சூழ்நிலையைப்பற்றி காம் அறிந்துகொள்ளலாம். ஆனால், நம்மைப்பற்றி நமக்குக் கூறும் பொறிகளும் உள. ஒருவகைப் பொறிகள் கம் உடலின் பல பாகங் களின் அசைவுகளையும் நிலைகளையும் நமக்குக் காட்டுகின்றன. வேறு சில பொறிகள் நம் உள்ளுறுப்புகளின் கிலையை மைக்குக் காட்டவேண்டிய பாலுணர்ச்சி, பசி போன்ற இயல்பூக்கங்களை எழுப்புகின்றன. - தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழர்கள் புலன்களின் அடிப்படையில் உயிரினங்களைப் பாகுபாடு செய்து உணர்ந்திருத் தனர். அவர்கள் உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாகப் பிரித்து வகைப்படுத்தியிருந்தனர் என்பதை மரபியல் 27 முதல் 34. வரையுள்ள நூற்பாக்களால் அறிந்துகொள்ளலாம். அறுவகை உயிர்கள் : உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றே யுடையது ஒசறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனோடு சுவையறிதலாகிய கசவுணர்வும் உடையது ஈசறிவுயிர். இவ்விரன் டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய காற்றவுணர்ச்சியும் உ.ை து மூவறிவுயிர். இம்மூவகை உணர்ச்சியுடன் கண்களாற் கண்டறித லாகிய ஒளியுணர்ச்சியும் பெற்றது காலறிவுயிர், இந் நால்வது புணர்வுடன் ஒசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப்பெற்றது. ஐயறிவுயிராகும். மேற்கூறிய ஐம்பொறியுணர்வோடு உப்த்துனர் 7. aur@ørrest „systnadssir - Radio-waves. 8. புதிர்க் கதிர்கள் - x- rays. 9, goorl-ā āśāsgir - Cosmic rays.