பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவகை உயிர்ப் பாகுபாடு . 421 என்ற விதியால் அறியலாம். "பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும், ர்ேவாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவும் கொள்ளப்படும்' என்பர் இளம்பூரணர். உயிர்வாழ் சாதியுள் மக்கள் எனப்படுவார் ஐம்பொறியுணர்வே பன்றி மனமென்பதோர் அறிவினையும் உடையர்: அவ்வகையைச் சார்ந்த பிறவும் உளவாம் என்று கூறுவர் ஆசிரியர். மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”* என்பது தொல்காப்பிய விதி. இதற்கும் பேராசிரியர் கூறியவுரை நியமுடையது. அவ்வுரை : முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடுஉ மகடூஉ மக்களெனப் படும். அவ்வாறு உணர்வினுட் குறைவுபட்டாரைக் குறைந்த வகை அறிந்து முற்கூறிய நூற்பாக்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக்கொள்ள வைத்தான் என்பது. அவை, ஊமுஞ் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார், தேவரும் தானவரும் முதலாயினார். *பிறப்பு’ என்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பது. "தாமே எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாச் என்ற தற்குச் சிறக்தார் என்பதும் கொள்க’ என்பதாகும். பொதுவாக, பிராணிகள் இயல்பூக்கங்களால் செயற்படு: கின்றன. இக்த இயல்பூக்கங்களும் பிராணிகளின் பிறப்பிலிருந்து அவை முதிர்ச்சியடையும் வரை மாறிக்கொண்டே வருகின்றன. ஒரு பூச்சியின் புழுப்பருவ நிலை பனையோ அல்லது ஒரு பறவை யின் குஞ்சு அல்லது பாலுணியின் குட்டியையோ உற்று கோக்கின், அவற்றின் நடத்தை அவற்றின் வளர்ந்த பிராணிகளின் நடத்தையி னின்றும் வேறுபடுவதை அறியலாம். ஆனால், உயர்நிலைப் பிராணிகளிடம் கினைவாற்றல் அதிகமாக இருப்பதாலும், அறிதிறன் தோன்றத் தொடங்குவதாலும், இந்த இயல்பூக்கங் 35. மாபி. நூற். 36 (இளம்.)

  • பிறவாவது தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்’ என்பர் இளம்பூசனர்.

36. Guusötiğ&öı 5sir - instincts 37. gp3 fo - Maturity 38. sygß$ w gór - intelligence