பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.22 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கள் அனுபவத்திற்கேற்றவாறு மாறக்கூடியவையாக உள்ளன : அவற்றிடம் கற்றல் ' என்ற செயலும் தொடங்குகின்றது. அனுப வத்தால் ஏற்படும் இயல்பூக்க கடத்தையின் மாற்றங்கள் மிக அரியனவாகவே உள்ளன ; பெரும்பாலான இயல்பூக்கங்கள் குடிவழி பாக அவற்றின் வழித்தோன்றல்களுக்கும் இறங்குகின்றன. மனிதனின் மிகச் சிக்கலான மூளையமைப்பின் காரணமாகவும், அது பல்வேறு தேர்ந்தெடுத்தல்களின் களஞ்சியமாக இருப்ப தாலும், அவனுடைய மனவாழ்வு' மிக வளமுள்ளதாக அமைக் துள்ளது ; படைப்புச் செயலுக்குப் பல வாய்ப்புகளைத் தருவ தாகவும் உள்ளது. அவனுடைய மூளையும் திட்டமான கோலங் களைக் கொண்ட கட்பிணைப்புக்களால்மட்டிலும் கட்டுப்பட்டிருக்க வில்லை. அவனிடம் முதன்முதலாகப் பகுத்தறிவு முறையில் கட்டுப்பாடுள்ள கடத்தை முழு நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளது. இது பல்வேறு கோக்கங்கள் (Goals) எய்துவதில் கொண்டு செலுத்துகின்றது . இதனால் அவனுடைய நடத்தையிலும் பல்வேறு வகைகளைக் காண்கின்றோம். இந்த நடத்தைக்கோலம் உயர் பிராணிகளின் நடத்தையைவிடப் பெரியது ; விரிந்த நிலையி லிருப்பது. அவனுடைய கினைவாற்றலும் மிக விரிந்த சிலையி லிருப்பதால், சிறப்புக்கூறுகளைப் பொதுக்கூறுகளுடன் இணைத்து ஆய்தல் நிகழ்த்துவதும் அவனுக்குச் சாத்தியமாகின்றது. இவற்றின் காரணமாக அவன் பிராணிகளைவிட அதிகமாகக் கற்கின்றான் தன் அனுபவத்தாலும் பிறருடைய அனுபவத்தாலும் அதிகப் பயனை அடைகின்றான் அவன் வாழுங்காலத்திலுள் ளாரின் அனுபவத்துடன் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவமும் அவனுக்குத் துணைபுரிகின்றது. இதன் காரணமாக, அவன் சூழ்ைேலயின் அறிவை மின்கு அடைகின்றான் : அதனைச் சிறந்த முறையில் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவும் கற்றுக்கொள் கின்றான். கந்துக மதக் கரியை வசமாய் கடத்துகின்றான் : கரடி வெம்புலி வாயையும் கட்டுகின்றான். சிறகின்றியே வானில் பறக்கின்றான் ; செவுள்களின்றியே நீரின் அடியில் பயணம் செய்கின்றான். கோடையைத் தட்ப நிலையாக்கவும் மாரியை வெப்ப கிலையாக்கவும் அறிந்துகொண்டுள்ளான். இவை யாவும் இவனுடைய ஆதாவது அறிவினால் - மன அறிவினால் - கடை பெறுகின்றன. அறிவுடையார் எல்லாம் உடையார்” என்ற வள்ளுவர் வாக்கும் இதன் காரணமாகவே எழுத்தது. மேலும், கற்பனை செய்யும் ஆற்றலும் மனிதனுடைய அறிவை வளர்ப்ப 39. S jö peð - Learning. 40. ubsorsumg, 6; - Fsychicai iife.